தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் புதிய முயற்சியாக எந்த ஊர்களில் சொத்து வாங்கினாலும் அதனை வாங்கும் நபர் இருக்கும் இடத்தில் இருந்தே பத்திரப் பதிவு செய்யலாம். இதற்காக வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர் வடக்கு ஆகிய பகுதிகளில் 5 மாதிரி பதிவு மையம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் பத்திரப்பதிவு துறையில் புதிய முயற்சியாக எந்த ஊர்களில் சொத்து வாங்கினாலும் அதனை வாங்கும் நபர் இருக்கும் இடத்தில் இருந்தே பத்திரப் பதிவு செய்யலாம். இதற்காக வட சென்னை , மத்திய சென்னை, தென் சென்னை, செங்கல்பட்டு , கோயம்புத்தூர் வடக்கு ஆகிய பகுதிகளில் 5 மாதிரி பதிவு மையம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.
இதுவரை மக்கள் ஒரு இடத்தில் உள்ள சொத்தை பதிவு செய்ய வேண்டும் என்றால், அந்த சொத்து எந்த பகுதியில் உள்ளதோ அந்த பகுதியில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று, அந்த சொத்தை பதிவு செய்ய வேண்டும். இந்த சூழலில் தமிழக அரசு எங்கிருந்தும் பதிவு செய்யும் முறையை கொண்டு வருகிறது. இதற்காக மாதிரி பதிவு மையங்கள் என்ற பெயரில் 25 புதிய சொகுசு மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது.
முதல் கட்டமாக 5 இடங்களில் அமைப்பு
வட சென்னை மத்திய சென்னை தென் சென்னை செங்கல்பட்டு கோயம்புத்தூர் வடக்குஇந்த 5 இடங்களில் சோதனை முயற்சியாக மாதிரி பதிவு மையங்கள் அமைய உள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், அடுத்து 20 இடங்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
அரசு பட்ஜெட்
முதல் கட்ட 5 மையங்களுக்கு மட்டும் ரூபாய். 7.84 கோடி செலவில் அமைக்க அரசு அனுமதி கொடுத்துள்ளது.
மக்களுக்காக செய்யப்பட உள்ள வசதிகள்
இந்த மாதிரி மையங்கள் சாதாரண பதிவாளர் அலுவலகம் போல இல்லாமல் நவின வசதிகளுடன் அமைய உள்ளதாக கூறப்படுகிறது. குளிர்சாதன வசதி கொண்ட காத்திருப்பு அறை 50 முதல் 100 பேர் வரை உட்காரும் வசதி தானியங்கி இசைவு சரிபார்ப்பு கருவி கண் மற்றும் கைரேகை வைத்து ஆதார் சரிபார்ப்பு தொடுதிரை வசதி கொண்ட தானியங்கி இயந்திரம் நவீன கணினிகள், அச்சு இயந்திரங்கள் 24 மணி நேர கண்காணிப்பு கேமரா மின்சாரம் தடைபடாமல் ஜென்ரேட்டர்கள்என பல வசதிகள் மக்கள் தேவைக்காவும் வசதிக்காவும் ஏற்படுத்தப்பட உள்ளது.
கட்டணம் விபரம்
இந்த மாதிரி மையங்களில் சாதாரண பதிவு கட்டணத்துடன் கூடுதலாக 4 வகையான வசதிக்கட்டணம் வசூலிக்கப்படும் என கூறப்படுள்ளது.
சாதாரண சேவைக்கு – ரூபாய். 2,000 அவசர சாதாரண சேவைக்கு – ரூபாய். 5,000 சிறப்பு சேவைக்கு – ரூபாய். 5,000 அவசர சிறப்பு சேவைக்கு – ரூபாய். 10,000இதில் வரும் பணத்தை அரசும், அதை நடத்தும் தனியார் நிறுவனமும் பங்கு போட்டுக் கொள்ளும். சாதாரண சேவையில் அரசுக்கு 80 விழுக்காடு, தனியாருக்கு 20 விழுக்காடு. அவசர சிறப்பு சேவையில் அரசுக்கு 65 விழுக்காடு, தனியாருக்கு 35 விழுக்காடு.
தனியார் நிறுவனங்களின் நிர்வாகம்
இந்த மையங்களை தனியார் சேவை நிறுவனம் ஒன்று 5 ஆண்டுகளுக்கு நடத்தும். அந்த நிறுவனம் ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்படும். கணினி பணிகளை டாடா ஆலோசனை சேவைகள் நிறுவனம் கவனிக்கும். ஆனால் பத்திரத்தில் கையெழுத்து இடும் அதிகாரம் அரசு அதிகாரியிடம் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு மையத்தில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவுக்குள் வேறு புதிய மையம் அமைக்க கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
Source link
