உதயநிதி – அன்பில் மகேஷ் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதாக நாஞ்சில் சம்பத் கூறியுள்ளது புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தமிழக அரசியல் வட்டாரத்தில் கடந்த சில நாட்களாகவே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது அன்பில் மகேஷ் பொய்யாமொழி மீதான ஊழல் புகார் மற்றும் கைது நடவடிக்கைகள் தான். 100 கோடிக்கு மேல் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் வழங்கி தருவதாக கூறி லஞ்சம் பெற்றதாக எழுத குற்றச்சாட்டின் அடிப்படையில், மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்து புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளன. இது திமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது .இந்த சூழலில் கடந்த சில தினங்களுக்கு முன்பு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் புழல் சிறைக்கு சென்று அன்பில் மகேஷ் பொய்ய மொழியை சந்தித்து பேசினார் இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றது. தற்போது உதயநிதி அன்பில் மகேஷ் இடையான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த நிர்வாகி நாஞ்சில் சம்பத் கூறியுள்ளது .பெரும் பரபரப்பு ஏற்படத்தில் உள்ளது. இது குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:
அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்ட விவகாரம்
அன்பில் மகேஷைக் காப்பாற்ற யாரும் முயற்சிக்க வேண்டாம். உப்பு தின்றவன் தண்ணீர் குடிக்க வேண்டும். தப்பு செய்தவன் தண்டனை அனுபவித்துத்தான் ஆக வேண்டும். இதில் ஆச்சரியப்படவோ அதிர்ச்சியடையவோ ஒன்றுமில்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது ஆண்டroutine ஆக பள்ளிகளைப் புதுப்பிக்கும் அங்கீகாரத்திற்கு பல நூறு கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. ஒரு ஆசிரியரின் மாறுதலுக்கு ரூ. 12 லட்சம் வரை வசூலிக்கப்பட்டது. அவரது பணிக்காலத்தில் தமிழகத்தில் 210 அரசுப் பள்ளிகள் இழுத்து மூடப்பட்டன. 1,500-க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் மாணவர் எண்ணிக்கை 30-க்கும் கீழ் சரிந்தது. மத்திய பாஜக அரசின் புதிய கல்விக் கொள்கையை (NEP) எவ்வித எதிர்ப்புமின்றி சத்தமில்லாமல் நடைமுறைப்படுத்த முயன்றது அவர்தான். அதைக் கண்டித்துத்தான் மாநிலக் கல்விக் கொள்கைக் குழுவில் இருந்த பேராசிரியர் ஜவகர் நேசன் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்று கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். மேலும், அன்பில் மகேஷ் அமைச்சரான புதிதில், அவரை நேரில் சந்தித்து ‘கார்ப்பரேட் பாசிசம்’என்ற நூலைப் பரிசளித்து, உதகையில் ஆசிரியையாகப் பணியாற்றிய கர்ப்பிணிப் பெண் ஒருவரின் இடமாறுதலுக்குத் தான் வைத்த நியாயமான கோரிக்கையைக் கூட அவர் மதிக்கவில்லை என்றும் வேதனையுடன் குறிப்பிட்டார்.
முன்ஜாமீன் கேட்டது ஏன்?
அன்பில் மகேஷ் கைதை திமுகவினர் அரசியல் பழிவாங்கல் என்று கூறிவருவது குறித்த கேள்விக்கு பதிலளித்த நாஞ்சில் சம்பத் திமுகவின் செய்தித் தொடர்பு துணைத் தலைவராக இருந்த அரசகுமார் ஏற்கனவே கைது செய்யப்பட்டார். அவர் மூலமாகத்தான் பணப் பரிவர்த்தனைகள் அனைத்தும் வெளிச்சத்திற்கு வந்தன. அவர்தான் முழு விவரங்களையும் புலனாய்வு அமைப்புகளுக்குத் தந்தார். விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தோம், 246 கேள்விகளுக்கும் பதிலளித்தோம் என்று திமுகவினர் கூறுகிறார்கள். அப்படியானால் எதற்காக நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கேட்டீர்கள்? கைது நடவடிக்கையை முன்கூட்டியே உணர்ந்துதான் அவரது குடும்பத்தினர் வெளிநாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த வழக்கில் அவருக்கு ஜாமீன் கிடைப்பது மிகக் கடினம் என்றார்.
உதயநிதி – அன்பில் மகேஷ் இடையே விரிசலா?
தொடர்ந்து பேசியவர் அன்பில் மகேஷுக்கும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினுக்கும் இடையே நிலவிய நட்பில் விரிசல் விழுந்துவிட்டதாகக் குறிப்பிட்ட நாஞ்சில் சம்பத் உதயநிதி நற்பணி மன்றத்தின் மாநிலத் தலைவராக இருந்த அன்பில் மகேஷ், உதயநிதிக்கே தெரியாமல் ஒரு தனியார் பள்ளியை விலைக்கு வாங்கியதாகத் தகவல் வெளியானது. இதனால் இருவருக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு உறவில் விரிசல் உண்டானது. எனவே, உதயநிதியே கூட இவரைத் தள்ளி வைத்திருக்கலாம் அல்லது தகவல் கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுகிறது என்று புதிய கோணத்தை முன்வைத்தார். மேலும், நாங்கள் மடியில் கனமில்லை, லஞ்சம் வாங்கவில்லை என்று ஸ்டாலினோ அல்லது சேகர்பாபுவோ நேரடியாக மறுத்துப் பேசாமல், ‘அரசியல் பழிவாங்கல்’ என்று நழுவுவது ஏன்?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
1967, 1977 வரிசையில் 2026: அரசியல் வரலாறு
துரைமுருகன் சமீபத்தில் எல்லாரும் எம்.ஜி.ஆர் ஆகிவிட முடியாது; எல்லாரும் விஜய் ஆகிவிட முடியாது” என்று பேசியதை வழிமொழிந்த நாஞ்சில் சம்பத்,திமுக – அதிமுக என மாறி மாறி வந்த வழக்கமான அரசியல் சக்கரத்தை தமிழக மக்கள் உடைத்தெறிந்துவிட்டார்கள். 1967-ல் அறிஞர் அண்ணா, ஆந்திராவில் என்.டி.ஆர், 1977-ல் எம்.ஜி.ஆர் நிகழ்த்திய வரலாற்று அரசியல் மாற்றத்தைப் போல, 2026-ல் தலைவர் விஜய் நிகழ்த்திக் காட்டியுள்ளார். மூன்றே ஆண்டுகளில் ஒரு புதிய அரசியல் சக்தியாக வளர்ந்து ஆட்சியைப் பிடித்தது சாதாரண விஷயமல்ல. தனுஷ் போன்ற நடிகர்கள் வெள்ளி காமாட்சி விளக்கு கொடுத்து தங்களை அடையாளப்படுத்த முனைவதும், அண்ணாமலை போன்றவர்கள் உண்மைகளைப் பேசி வரவேற்பதும் தமிழக அரசியலின் புதிய பரிணாமங்கள் என்று தெரிவித்தார்.
Source link
