My Favoy தோனியை மிஸ் பண்ற.. தேர்தல் நடுவே முதல்வர் ஸ்டாலின் கிரிக்கெட் பதிவு – கேப்ஷன் தான் ஹைலைட்! – chief minister m.k. stalin’s cricket-related post goes viral online during the election season

தமிழகத்தில் சட்டமன்றதேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் தேதி நடைபெற உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரை திமுக, அதிமுக, நாதக மற்றும் புதிய வரவாக வந்துள்ள அரசியல் கட்சிகளிடையே நான்குமுனைப் போட்டி நிலவவுள்ளது. இதனால், தமிழக அரசியல் பிரச்சாரங்களால் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

சட்டமன்ற தேர்தல் 2026

அரசியல் களத்தில் ஆளும் கட்சியாக இருக்ககூடிய திமுக அதன் கூட்டணி கட்சிகளும், இழந்த ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் அதனைத்து கட்சித்தலைவர்களும்,சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் வேட்பாளர்களை ஆதரித்து கட்சித் தலைவர்கள் ஊர் ஊராக சென்று மக்களிடம் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள ஒரு புகைப்படம் அரசியல் வட்டாரத்தில் வேகமாக பரவி வருகிறது.இது குறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது : “Amid a high-voltage campaign, a quick IPL break!” சாம்சன் செஞ்சுரியைப் பார்த்தாலும், என்னோட favourite தோனியை miss பண்ற feeling avoid பண்ண முடியல ” என்று தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?

தீவிர அரசியல் பயணத்தில் முதல்வர்

மேலும் அந்த புகைப்படத்தில் முதல்வர் ஸ்டாலின், தேர்தல் பயணத்தின் இருந்த போது காரில் இருந்தபடியே தன்னுடை டேப்லெட்டில் ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை ரசித்துப் பார்க்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இது தற்பொது இணையத்தில் வைரலாகி வருகிறது.அதில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி அணிகளுக்கு இடையே நடந்த போட்டியை தான் காரில் இந்தபடி பார்த்துக்கொண்டு இருந்தார்.

சாம்சன் செஞ்சுரியை பார்த்தாலும், எனக்கு பிடித்த தோனி இல்லாத குறையை மறக்க முடியவில்லை என்று அவர் ஒரு தீவிர கிரிக்கெட் ரசிகராக தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார். பொதுவாக தேர்தல் காலத்தில் தலைவர்கள் பிசியாக பணிகளில் ஈடுபட்டு வருவார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின் மிகவும் அமைதியாகவும், ரிலாக்ஸ் நிலையில் போட்டியை ரசிக்கும் புகைப்படம் வெளியானது, அவர் தேர்தல் சூழலையும் அமைதியாக எதிர்கொள்கிறார் என்பதாக திமுக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

மு.க. ஸ்டாலின் ஐபிஎல் பதிவு

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே உள்ள நிலையில், இந்த ஐபிஎல் தொடர்பான முதல்வரின் பதிவு சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகியுள்ளது. குறிப்பாக திமுகவினரும் சிஎஸ்கே ரசிகர்களும் இதனை டிரெண்ட் செய்து வருகின்றனர்.

அரசியல் களத்தில் ஸ்டாலின் எப்படியோ, அதேபோல் கிரிக்கெட் களத்தில் தோனி – இருவரும் தங்களது துறையில் தலைசிறந்தவர்கள் என திமுகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர். தேர்தல் பரபரப்பின் நடுவே ஒரு சிறிய ஓய்வாக முதல்வர் எடுத்த இந்த கிரிக்கெட் தருணம் தற்போது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.

சமீப நாட்களில் வைப் வித் ஸ்டாலின் என்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசியிருந்தார். அப்போது , விளையாட்டு துறை வீரர்களுடன் பேசும் போது எனக்கு கிரிக்கெட் பிடிக்கும் என்றும், தல தோனி எனக்கு மிகவும் பிடித்த வீரர் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில் தற்போது முதல்வர் ஸ்டாலின் இந்த பதிவு கவனம் பெற்றுள்ளது.

Source link