விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகை வெறும் ரூ.500 மட்டும்தானா? வைரலான போட்டோ-முதல்வர் விஜய் வழங்கிய காசோலையின் பின்னணி – cm vijay sports players monthly 500 rupees assistance photo controversy fact check tamil nadu

கடந்த அக்டோபர் 15ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி ,கோயம்புத்தூர், நாமக்கல் ,அரியலூர் ,திண்டுக்கல் ,திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களில் தமிழக அரசு சார்பில் போட்டிகள் நடைபெற்றது. சுமார் 45 வகையான விளையாட்டு பிரிவுகளில் நடைபெற்ற இந்த போட்டிகளில் மாநில முழுவதும் இருந்து சுமார் 38 ஆயிரம் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

சென்னை மாவட்டம் முதலிடம் பெற்று சாதனை

இப்போட்டிகளில் சென்னை மாவட்டம் 141 தங்கம், 95 வெள்ளி, 79 வெண்கலம் என மொத்தம் 315 பதக்கங்களைக் குவித்து மாநில அளவில் முதலிடத்தைப் பிடித்து அசத்தியுள்ளது.இதனைத் தொடர்ந்து, 63 தங்கம், 43 வெள்ளி, 36 வெண்கலம் என மொத்தம் 142 பதக்கங்களுடன் செங்கல்பட்டு மாவட்டம் இரண்டாம் இடத்தையும், 27 தங்கம், 37 வெள்ளி, 53 வெண்கலம் என மொத்தம் 117 பதக்கங்களுடன் கோவை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.

இந்த நிலையில் 38 மாவட்டங்களிலும் உள்ள வீரர் வீராங்கனைகளை ஊக்குவிக்கும் வகையில் மாவட்டம் மற்றும் மண்டல வாரியாக நடத்தப்பட்ட ‘முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்’- லின் மாநில அளவிலான சுற்றுகள் நிறைவடைந்துள்ளன. இதன் பிரம்மாண்ட நிறைவு விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் போட்டிகளில் சிறப்பிடம் பிடித்த வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு தொகைகளையும், பதக்கங்களையும் வழங்கினார். அதோடு தேசிய மற்றும் சர்வதேச அளவிலான போட்டிகளில் பதக்கங்களை வென்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்த விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கத்தொகையும், ரொக்க பரிசையும் வழங்கி தனது பாராட்டுகளை தெரிவித்தார்.

அப்போது விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கு தமிழக அரசு சார்பில் 500 ரூபாய் மட்டுமே தொகை அச்சிடப்பட்டு வழங்கப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் புகைப்படம் வெளியாகி சலசலப்பை ஏற்படுத்தியது. மேலும் தமிழக அரசையும், தமிழக வெற்றிக்கழகத்தையும் விமர்சிக்கும் வகையில் பல இணையவாசிகள், இது தவெக அரசின் சாதனை விளம்பரம் என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறது என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.

தவறான தகவலைப் பரப்பாதீர்- உண்மை சரிபார்ப்பகம்

சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி படம் குறித்து தமிழ்நாடு உண்மை சரிபார்ப்புக் குழு (TN Fact Check) ஆய்வு மேற்கொண்டு வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: இந்த சூழலில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.500 மாதந்தோறும் வழங்கப்படும் உதவித் தொகையாகும். வெறும் ரூ.500 மட்டும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாக பரவும் தகவல் தவறானது. தவறான தகவலைப் பரப்பாதீர் என்று தெரிவித்துள்ளது.

தமிழக விளையாட்டு வீரர்களுக்கு மாதம் ரூ.500 உதவித்தொகை

அதாவது , நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக , தமிழ்நாட்டு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்படும் விடுதிகள் மற்றும் சிறப்பு நிலை விளையாட்டு மையங்களில் தங்கி பயிற்சி பெற்று வரும் வீரர் வீராங்கனைகளுக்கு உதவும் வகையில் புதிய நிதி உதவி திட்டம் தொடங்கப்பட்டது. அதன்படி, சிறப்பு நிலை விளையாட்டு மையங்கள் மற்றும் விளையாட்டு விடுதிகளில் பயிற்று பெரும் வீரர் வீராங்கனைகளின் தனிப்பட்ட செலவுகளுக்காக மாதம் தோறும் ரூபாய் 500 வழங்கப்படும். அதேபோல் முதன்மை விளையாட்டு மைய விடுதிகளில் பயிற்சி பெறும் வீரர் வீராங்கனைகளுக்கு மாதம் தூறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இந்த திட்டத்தின் மூலம் மொத்தம் 200600 விளையாட்டு வீரர்கள் பயன்பெற உள்ளன. இதற்காக ஆண்டுதோறும் சுமார் ₹ 1.77 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. விளையாட்டு வீரர்களின் அன்சார தேவைகளுக்கு இந்த தொகை உதவுவதுடன் அவர்களின் பயிற்சிக்கும் வளர்ச்சிக்கும் ஊக்குமளிக்கும் நோக்கில் இந்த விளையாட்டு வீரர்கள் மேம்பாட்டு உதவி தொகை திட்டம் செயல்படுத்தப்படுகிறது என தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link