ஆஷா போஸ்லே மறைவு; மிகவும் வருத்தமுற்றேன்.. – சசிகலா இரங்கல்

சென்னை,

அனைத்து இந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழக பொதுச்செயலாளர் சசிகலா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது;-

பிரபல திரைப்பட பின்னணி பாடகி ஆஷா போஸ்லே மாரடைப்பால் காலமானார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

திரைப்படத்துறையில் இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது, பத்ம விபூஷண் மற்றும் கிராமி விருதுகள் பெற்று சாதனை படைத்து, இசை உலகில் தன்னிகரற்ற ராணியாக விளங்கிய ஆஷா போஸ்லே தனது 80 ஆண்டுகால இசைப்பயணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 12,500 பாடல்களுக்கு மேல் பாடியிருக்கிறார்.

இசை உலகில் மிக அதிக பாடல்களை பதிவு செய்து கின்னஸ் சாதனையை படைத்துள்ள ஆஷா போஸ்லேவை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், இசை ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link