Maruti Suzuki EV Car Export,எலெட்க்ரிக் கார் ஏற்றுமதி: 50,000 கார்களைக் கடந்து மாருதி சுஸுகி சாதனை – maruti suzuki exported over 50 thousand ev cars since 2025 august from india

இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாகவே எலெக்ட்ரிக் வாகனச் சந்தை வேகமாக மாறி வருகிறது. உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட மின்சாரக் கார்கள் இப்போது வெளிநாடுகளுக்கு அதிகமான அளவில் ஏற்றுமதி செய்யப்படுகின்றன. இந்தியாவின் மிகப்பெரிய கார் நிறுவனங்களில் ஒன்றான மாருதி சுஸுகி , ஏற்றுமதியில் ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. இந்நிறுவனம் 2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்யத் தொடங்கியது. அதிலிருந்து 2026 அக்டோபர் மாதத்துக்குள் 50,000க்கும் மேற்பட்ட எலெட்ரிக் கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது.

குறிப்பிடத்தக்க வகையில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் மின்சாரப் பயணிகள் வாகனங்களில் இந்நிறுவனத்தின் பங்கு சுமார் 93 சதவீதமாக இருக்கிறது. 2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் முதல் 2026 அக்டோபர் மாதம் வரையிலான காலத்தில் தங்களுடைய மொத்த மின்சார வாகன ஏற்றுமதி 50,000 யூனிட்களைக் கடந்துள்ளதாக மாருதி சுஸுகி இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது. ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மின்சாரப் பயணிகள் வாகனங்களில் சுமார் 93 சதவீதம் இந்நிறுவனத்துக்கு சொந்தமானது என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை சர்வதேச சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனம் கொண்டுள்ள வலுவான இடத்தைப் பிரதிபலிக்கிறது.

மாருதி சுஸுகி நிறுவனம் தனது மின்சார எஸ்யூவி வாகனமான இ-விட்டாராவை ஐக்கிய இராச்சியம், நார்வே, ஜெர்மனி, ஜப்பான் மற்றும் சுவிட்சர்லாந்து உள்ளிட்ட சுமார் 50 நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. ஐரோப்பா, இந்நிறுவனத்தின் மிகப்பெரிய ஏற்றுமதிச் சந்தையாக உள்ளது. இந்த எஸ்யூவி வாகனத்தின் உற்பத்தி குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் ஆலையில் 2025ஆம் ஆண்டின் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. உலகம் முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்பனை செய்யும் நோக்கத்தில் இந்நிறுவனம் இ-விட்டாரா மாடலை வடிவமைத்துள்ளது.

குஜராத்தில் உள்ள ஹன்சல்பூர் ஆலை பேட்டரி மூலம் இயங்கும் மின்சாரக் கார்களுக்காக சுஸுகி நிறுவனம் அமைத்துள்ள முதல் பிரத்யேக உலகளாவிய உற்பத்தி மையமாகும். இந்த ஆலையின் ஆண்டு உற்பத்தித் திறன் சமீபத்தில் 1 மில்லியன் வாகனங்களாக அதிகரிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரே இடத்தில் இவ்வளவு பெரிய உற்பத்தித் திறனை எட்டிய சுஸுகியின் முதல் உற்பத்தி ஆலை இதுவாக மாறியுள்ளது. ஹன்சல்பூர் ஆலையில் மொத்தம் ரூ. 25,288 கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. ஏற்றுமதி கண்ணோட்டத்தில் இந்த ஆலை மிகவும் முக்கியமானது.

2025-26 நிதியாண்டில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் மொத்த வெளிநாட்டு ஏற்றுமதியில் ஏறக்குறைய பாதி பங்களிப்பை இந்த ஆலை வழங்கியுள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியான ஹிசாஷி டகேச்சி வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, சுமார் 50 நாடுகளுக்கு மின்சார வாகனங்களை ஏற்றுமதி செய்வதும், இந்தியாவின் மின்சார வாகன ஏற்றுமதியில் கணிசமான பங்கைப் பெறுவதும் அந்நிறுவனத்துக்கு ஒரு பெரிய சாதனையாகும்.

Source link