அக்ஷிதா வீடியோ: பிக் பாஸ் வீட்டில் இருக்கும் அவினாஷ் மற்றும் அக்ஷிதா உடன்பிறப்புகள் என்பது தெரியும். அந்த வீட்டில் அவர்கள் ஒற்றுமையாக இருந்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்களின் வீடியோ ஒன்று பிக் பாஸ் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்த்து அதை அதிக அளவில் ஷேர் செய்ய வைத்திருக்கிறது.
அந்த வீடியோவில் அக்ஷிதாவை அடிக்க வருகிறார் அவினாஷ். அதை குடும்பத்தார் தடுக்கிறார்கள். அக்ஷிதாவோ அடி அடி இப்போ போஸ்ட் போடப் போகிறேன் என்று அதை தன் கையில் இருக்கும் செல்போனால் வீடியோ எடுத்திருக்கிறார். அந்த போஸ்ட்டில் அக்ஷிதா கூறியிருப்பதாவது, இது தான் எனக்கு எப்பொழுதும் நடக்கிறது. இந்த ஆள் என்னை ஒரு முறை கூட சரியாக நடத்தியது இல்லை.
அவர் என்னை அடித்ததும் இது முதல் முறை அல்ல. தொடர்ந்து அடிக்கிறார். இனியும் நான் அமைதியாக இருக்கப் போவது இல்லை. அவர் எந்த மாதிரியான ஆள் என்று இந்த உலகம் தெரிந்து கொள்ளட்டும். நீங்கள் ஆன்லைனில் பார்க்கும் அனைத்தும் உண்மை கிடையாது. புகைப்படங்கள், போஸ்ட்டுகளை தாண்டி ஒரு உண்மை இருக்கிறது. இது தான் அவரின் உண்மை முகம். இனியும் என்னால் வலியை தாங்கிக் கொண்டு பயத்தில் வாழ முடியாது. என்னை தொடர்ந்து காயப்படுத்தும் ஒருவரை நான் இனியும் பாதுகாக்க மாட்டேன் என்றார்.
டேஞ்சரில் அக்ஷிதா: டாஸ்க்கின்போது டிடிஎஃப் வாசனை தவாவால் தாக்கிவிட்டு அடிக்கவே இல்லை என்று கூறினார் அக்ஷிதா. ஆனால் அவர் அடித்த வீடியோவை வாசன் ஆதரவாளர்கள் பத்திரமாக வைத்திருக்கிறார்கள். சக போட்டியாளரை தாக்கிய அக்ஷிதாவுக்கு இந்த வாரம் ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என்று சமூக வலைதளங்களில் தொடர்ந்து கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்ஷிதாவின் பழைய வீடியோ வெளியே வந்திருப்பதை பார்த்தவர்களோ, அவருக்கு இந்த வாரம் எவிக்ஷன் உறுதி என்பதால் காப்பாற்றுவதற்காகவிக்டிம் கார்டை பயன்படுத்தி அவினாஷை பலிகொடுக்கப் பார்க்கிறார்கள் என்கிறார்கள்.
தவாவை தூக்கி தரையில் போடும் அவினாஷ், அதை எடுத்து அடுத்தவர்களை அடிக்கும் அக்ஷிதா ஆகியோரை சேர்த்தே இந்த வாரம் வெளியேற்றினால் சிறப்பாக இருக்கும் பிக் பாஸ் என்கிறார்கள் பார்வையாளர்கள். ஆனால் அண்ணனையும், தங்கையையும் ஒரே நேரத்தில் அனுப்ப வாய்ப்பு இல்லை.
அக்ஷிதா காயமா?: இதற்கிடையே பந்தை வைத்து கோல் போடும் டாஸ்க்கில் தன்னால் முடியவில்லை என கீழே விழுந்தார் அக்ஷிதா. உடனே ஹவுஸ்மேட்ஸ் எல்லாம் பதறியடித்து அவரை தூக்கிக் கொண்டு சிகிச்சை அளிக்கும் அறைக்கு ஓடினார்கள். அதை பார்த்து அவினாஷ் கவலைப்படவே, தைரியமாக இருக்குமாறு கூறினார் பிக் பாஸ்.
அக்ஷிதாவுக்கு ஒரு காயமும் இல்லை. எல்லாம் நடிப்பு. ப்ரித்வி விழுந்த போது ஹவுஸ்மேட்ஸ் யாரும் இப்படி துடிக்கவில்லையே. அக்ஷிதாவுக்கு மட்டும் துடிப்பது ஏன்?. ஆக, இந்த வாரம் அக்ஷிதாவை கண்டிப்பது மாதிரி கண்டித்து இனி இப்படி செய்யக் கூடாது என்று மட்டும் சொல்லப் போவது தெளிவாகத் தெரிகிறது. அதற்கு தான் காயம் அடைந்தது போன்று சீன், பழைய வீடியோ ஷேர் என்று பலமாக வேலை நடக்கிறது என்று பிக் பாஸ் நிகழ்ச்சியை பார்ப்பவர்கள் தெரிவித்துள்ளனர்.
சூப்பர் ஸ்டார் பட்டம் வரலாறு மற்றும் முக்கிய நிகழ்வுகள்
இந்நிலையில் அக்ஷிதாவுக்கும், முகேஷுக்கும் இடையே உருவாகியிருக்கும் புது காதல் பார்வையாளர்களை முகம் சுளிக்க வைத்திருக்கிறது. ஆளை மாத்திட்டீங்களா முகேஷ் என்று கிண்டல் செய்கிறார்கள்.
Source link
