முதல்வர் விஜய் ஜாடையில் பெரியப்பா: நீலாங்கரை Home-ல் அமல் ராஜசேகரனின் கடைசி நாட்கள் – know about tamil nadu cm vijay periyappa rajasekaran and amal at neelankarai senior citizen home

தனது பெரியம்மா அமல் ராஜசேகரன் வயது முதிர்வால் காலமான நிலையில், அவரது உடலுக்கு நேரில் சென்று செலுத்தியிருக்கிறார் தமிழக முதலமைச்சர் விஜய். இந்நிலையில் அவரது பெரியப்பா குடும்பத்தின் பின்னணி குறித்த தகவல்களை விரிவாக பார்க்கலாம்.

சென்னை நீலாங்கரையில் உள்ள Mother Josephine Vannini என்ற பெயரில் இயங்கும் முதியோர் இல்லத்தில் வசித்து வந்த அமல் ராஜசேகரன் வயது மூப்பு காரணமாக காலமானார். இவருக்கு வயது 92. அமல் ராஜசேகரன் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்றுள்ளார். முன்னதாக இவரது பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகர், ஷோபா ஆகியோரும் நேரில் வருகை புரிந்துள்ளனர். சிறுவயதில் பலமுறை பெரியப்பா, பெரியம்மா உடன் நேரம் செலவிட்ட நிலையில், அமல் ராஜசேகரனின் மறைவு முதலமைச்சர் விஜய்க்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முதலமைச்சர் விஜய்யின் பூர்வீகம் முத்துப்பேட்டை கிராமம்

இந்நிலையில் இவர்களது குடும்ப பின்னணியை பற்றி விரிவாக தெரிந்து கொள்ளலாம். ராமநாதபுரம் மாவட்டத்தில் கடற்கரையோரம் அமைந்துள்ள கிராமம் முத்துப்பேட்டை. இதுதான் முதலமைச்சர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பூர்வீக ஊர்.

இவருடைய தந்தை சேனாதிபதி பிள்ளையின் கல்லறை அங்குள்ள சர்ச் வளாகம் ஒன்றில் தான் அமைந்துள்ளது. இங்கு எஸ்.ஏ.சந்திரசேகர் அடிக்கடி நேரில் சென்று வருவது வழக்கம். மொத்தம் நான்கு தலைமுறைகளாக இந்த ஊரில் விஜய்யின் குடும்பத்தினர் வசித்து வந்துள்ளனர்.

சென்னையில் வசிக்கும் விஜய் பெரியப்பா ராஜசேகரன்

​எஸ்.ஏ.சந்திரசேகரின் மூத்த அண்ணன் ராஜசேகரன். அடுத்த அண்ணன் தனசேகரன். மேலும் ஒரு தங்கை இருந்துள்ளார். தனசேகரனும், தங்கையும் ஏற்கனவே இறந்துவிட்டனர். தற்போது ராஜசேகரன் மட்டும் இருக்கிறார். இவர் பார்ப்பதற்கு விஜய் போலவே இருக்கிறார் என்று பலரும் கூறுவதுண்டு. BHEL நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். பின்னர் 6 ஆண்டுகள் சவுதி அரேபியாவில் உள்ள பவர் ஸ்டேஷனில் வேலை பார்த்தார்.

நீலாங்கரை Home-ல் வசித்த ராஜசேகரன், மனைவி அமல்

இதையடுத்து சென்னை நீலாங்கரையில் உள்ள Mother Josephine Vannini முதியோர் இல்லத்தில் தனது மனைவி அமல் உடன் வசித்து வந்தார். இந்த தம்பதிக்கு 2 மகன்கள், ஒரு மகள். இந்த மூவரும் வெளிநாட்டில் வசித்து வருகின்றனர். தங்களை பார்த்து கொள்வதற்கு ஆட்களை இல்லாததால், Home-ல் சேர்ந்து கொண்டனர்.

அங்கு இவர்களுக்கு தேவையான உணவு, உடை, மருத்துவ வசதிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளிட்டவற்றை அளித்து வருகின்றனர். நீலாங்கரை Home-ல் தினசரி காலை, மாலையும் நடைபயிற்சி மேற்கொள்வர்.

வயது மூப்பால் காலமான விஜய் பெரியம்மா

வாரந்தோறும் மருத்துவ பரிசோதனைகள் நடைபெறும். இந்த சூழலில் தான் அமல் ராஜசேகரன் வயது மூப்பால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளால் இன்று காலமானதாக Home நிர்வாகத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிரான்ஸ்பரால் மாறி மாறி படித்த விஜய் தந்தையும், பெரியப்பாவும்

எஸ்.ஏ.சந்திரசேகரின் தாயார் பள்ளி ஆசிரியை. தந்தை சேனாதிபதி ரயில்வேயில் ஸ்டேஷன் மாஸ்டராக இருந்தவர். இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை பணியிடமாற்றம் செய்யப்பட்டு வந்ததால் தென் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தானும், அண்ணனும் படித்ததாக பேட்டி ஒன்றில் அவர் விளக்கியுள்ளார். அதாவது, ராமநாதபுரம், திருப்புவனம், மானாமதுரை, திருப்பாச்சேத்தி, காமன்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் படித்திருக்கிறார். காமன்கோட்டையில் தான் எஸ்.ஏ.சந்திரசேகர் தனது எஸ்.எஸ்.எல்.சி படிப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

Source link