கணவனை வைத்துக் கொண்டே கள்ள காதலனுடன்.. ஆடிப்போன போலீஸ்!

மத்திய பிரதேச மாநிலம் தார் மாவட்டத்தை சேர்ந்தவர் பிரியங்கா. அடையாளம் தெரியாத நபர்கள் தனது கணவர் தேவகிருஷ்ணாவை கொலை செய்து விட்டு, வீட்டில் இருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். உடனே சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்ட போது பல அதிர்ச்சி தகவல் வெளியானது.

தகவலின்படி, தம்பதியினருக்கு இடையே நீண்ட நாட்களாகவே சுமூகமான உறவு இல்லை. “நீ கருப்பாக இருக்கிறாய், நான் உன்னை விட அழகா இருக்கிறேன்” என்று பிரியங்கா தனது கணவரை தொடர்ச்சியாக அவமானப்படுத்தி வந்தாராம். பலமுறை விவாகரத்து கேட்டும் தகராறு செய்திருக்கிறார்.

அதுமட்டுமல்லாது பிரியங்காவிற்கு கமலேஷ் என்ற நபருடன் தகாத உறவும் இருந்துள்ளது. தங்களது காதலுக்கு இடையூறாக இருக்கும் கணவனைத் தீர்த்துக்கட்ட பிரியங்காவும் கமலேஷும் இணைந்து திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக கமலேஷ் தனது நண்பன் சுரேந்திராவை அணுகியுள்ளார். தேவகிருஷ்ணாவைத் தீர்த்துக்கட்ட ஒரு லட்சம் ரூபாய் பேசி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

சம்பவத்தன்று இரவு, தேவகிருஷ்ணா தூங்கி கொண்டிருந்தபோது, உள்ளே புகுந்த கமலேஷும் சுரேந்திராவும் தேவகிருஷ்ணாவை தாக்கி நிலைகுலையச் செய்துள்ளனர்.. இதில் பலத்த காயமடைந்த தேவகிருஷ்ணா சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

அதன் பிறகு இது நகை பணத்திற்காக நடந்த மரணம் என்று காட்டுவதற்காக பீரோவைத் திறந்து நகைகளைச் சிதறவிட்டு நாடகமாடியுள்ளனர். மனைவியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகமும், குடும்பத்தினர் அளித்த வாக்குமூலமும் உண்மையை அம்பலப்படுத்தியது. மூவரையும் கைது செய்த போலீசார் சிறையில் அடைத்தனர்.

Source link