ஹார்முஸ் நீரிணையை முழுமையாக திறப்பதில் சிக்கல் :
ஹார்முஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்துக்கு முழுமையாக திறப்பதில் பெரும் சிக்கல் எழுந்துள்ளது. அமெரிக்காவின் கடற்படைக்கு எதிராகா ஈரான் ஹார்முஸ் நீரிணையில் கடல் கண்ணிவெடிகளை பதித்திருந்தன.
தற்போது எந்த இடத்தில் கண்ணிவெடிகள் இருக்கின்றன என்ற தரவு ஈரானிடம் இல்லாததால் அமெரிக்க கடற்படையின் 2 ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் கண்ணிவெடிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.
ஹிஸ்புல்லாவின் 200-க்கும் மேற்பட்ட தளங்கள் மீது தாக்குதல் :

லெபனானில் கடந்த 24 மணி நேரத்தில் ஹிஸ்புல்லாவின் 200-க்கும் மேற்பட்ட தளங்கள் தாக்கப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்துவதைத் தடுக்கும் நோக்கில், இஸ்ரேலிய விமானப்படை ஹிஸ்புல்லாவின் உள்கட்டமைப்புகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வரும் காட்சிகளை இஸ்ரேல் பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ளது.
அமெரிக்க-ஈரான் போர் நிறுத்தப் பேச்சுவார்த்தை :
இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகளின் முதல் கட்டம் நிறைவடைந்துள்ளது. முன்னதாக நடைபெற்ற நேரடி சந்திப்புகள், ஒப்பந்தங்களை உறுதி செய்வதற்காக இரு தரப்பினரும் தற்போது எழுத்துப்பூர்வமான உரைகளைப் பரிமாறி வருகின்றனர். ஆயினும், முழுமையான போர்நிறுத்த ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை.
ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சரை சந்தித்த ஜெய்சங்கர் :

அபுதாபியில் ஐக்கிய அரபு அமீரக வெளியுறவு அமைச்சரை சந்தித்த வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மேற்கு ஆசியப் பாதுகாப்பு மற்றும் மூலோபாயக் கூட்டாண்மை குறித்து விவாதித்தார். இது தொடர்பாக ஜெய்சங்கர் வெளிட்டுள்ள எக்ஸ் பதிவில் தங்கள் உரையாடல், மாறிவரும் பிராந்தியச் சூழல் மற்றும் அதன் தாக்கங்கள் குறித்து அமைந்ததாக குறிப்பிட்டார்.
