Sundar C About Fake News,வீண் பழிகள் நம்மை வீழ்த்திவிடாது..மீண்டும் ஒரு போலி அறிக்கை..பதிலடி கொடுத்த சுந்தர் சி – pnk candidate sundar c response to fake news regarding madurai meenatchi amman temple

நடிகரும் இயக்குனருமான சுந்தர் சி முதல்முறையாக அரசியலில் களம் காண்கின்றார். அதிமுக கூட்டணியில் இடம்பிடித்திருக்கும் புதிய நீதி கட்சி சார்பில் வேட்பாளராக களமிறங்குகிறார் சுந்தர் சி, திடீரென சுந்தர் சி அரசியலில் குதித்தது பலருக்கும் ஆச்சர்யமான விஷயமாக இருந்தது. என்னதான் அவரது மனைவி குஷ்பூ அரசியலில் இருந்தாலும் இதுவரை சுந்தர் சி அரசியல் குறித்து அவ்வளவாக எந்த ஒரு கருத்தையும் கூறியதில்லை.

திரைத்துறை சம்மந்தமாக தான் சுந்தர் சி பேசி வந்தார். எனவே தான் அவரின் அரசியல் வருகை பலருக்கும் ஆச்சர்யமாக இருந்தது. சுந்தர் சிக்கு அரசியல் தெரியுமா ? அரசியல் வரலாறு தெரியுமா ? என்ற கேள்விகள் இருந்து வர அதற்கெல்லாம் குஷ்பூ பதிலடி கொடுத்திருந்தார். என் அரசியல் வாழ்க்கைக்கு பக்கபலமாக இருந்தவரே அவர் தான். அவருக்கு அரசியல் வரலாறு அனைத்தும் தெரியும் என கூறியிருந்தார் குஷ்பூ.

சுந்தர் சி பரப்புரை

இந்நிலையில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிடும் சுந்தர் சி தனது பரப்புரையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றார். மதுரையின் சிறப்பை கூறி மதுரை மத்தியின் மக்களுக்கு தேவையான விஷயங்களை எடுத்துரைத்து அந்த தொகுதியில் இருக்கும் குறைகளை கூறி பரப்புரை செய்து வருகின்றார் சுந்தர் சி. மேலும் அந்த தொகுதியில் தான் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன விஷயங்களை எல்லாம் செய்வேன் என்றும் கூறி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றார் சுந்தர் சி.

மேலும் திமுக சார்பாக அங்கு போட்டியிடும் பிடிஆர் அவர்களின் கருத்துக்களுக்கும் சுந்தர் சி பதிலடி கொடுத்து வருகின்றார். சுந்தர் சியின் பரப்புரைகளை பார்க்கும்போதே அவருக்கு அரசியல் நன்கு தெரிவதாக பலர் தங்களின் கருத்துக்களை கூறி வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்போது இணையத்தில் போலி அறிக்கைகள் சுந்தர் சி தொடர்பாக வந்துகொண்டு இருக்கின்றன. ஒரு சில தினங்களுக்கு முன்பு தேர்தலுக்கு பிறகு மதுரையில் இறைச்சி கடைகளை சுந்தர் சி தடை செய்வதாக கூறியதாக ஒரு போலியான செய்திகள் உலா வந்தன.

போலி அறிக்கைகள்

இந்த போலியான செய்திகளுக்கு குஷ்பூமுற்றுப்புள்ளி வைத்து இதுபோன்ற செய்திகளை பரப்புபவர்களை கடுமையாக சாடினார். இதனைத்தொடர்ந்து தற்போது சுந்தர் சி குறித்து மேலும் ஒரு போலியான செய்தி வெளியாகி இருக்கின்றது. அதாவது மதுரை மீனாட்சி அம்மன் புகழை உலகிற்கு காட்ட வேண்டும். அதற்கு கோவிலுக்குள் திரைப்பட படப்பிடிப்பை நடத்த அனுமதி வழங்க வேண்டும். அப்போது தான் மதுரை மீனாட்சி அம்மனின் புகழ் உலகமெங்கும் பரவும் என சுந்தர் சி சொன்னதாக ஒரு போலி அறிக்கை இணையத்தில் பரவியது.

இது சுந்தர் சியின் பார்வைக்கு செல்ல இந்த போலி செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கின்றார். அதோடு இதுபோன்ற போலி செய்திகளை பரப்புபவர்கள் குறித்தும் தன் கருத்தினை பதிவிட்டு இருக்கின்றார் சுந்தர் சி. இதைப்பற்றி அவர் பதிவிட்டவாறு ,அன்னை மீனாட்சி அம்மனின் அருளையும் ஆலைய விதிகளையும் நன்கு அறிந்தவன் நான். எங்கு எதை செய்ய வேண்டும், எதை செய்ய கூடாது என்பதையும் நன்கு அறிந்தவன் நான்.

சுந்தர் சி பதிலடி

எனவே இதுபோன்ற அறிவற்ற போலி அறிக்கைகளை தயாரித்து நேரம் வீணடிப்பவர்கள் வெறும் வீணர்களே, வீண் பழிகள் நம்மை வீழ்த்திவிடாது என பதிவிட்டார் சுந்தர் சி. இவ்வாறு தன்னை பற்றி தான் சொன்னதாக பரவும் போலி செய்திகளால் சுந்தர் சி காட்டத்தில் இருக்கின்றார். இருந்தாலும் இதுபோன்ற போலி அறிக்கைகள் தங்களை வீழ்த்தாது எனவும் திட்டவட்டமாக கூறியிருக்கின்றார் சுந்தர் சி.

இந்நிலையில் சுந்தர் சி போட்டியிடும் மதுரை மத்திய தொகுதியில் திமுகதான் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். கடந்த இரு தேர்தல்களில் பிடிஆர் தான் இங்கு வெற்றிபெற்றுள்ளார். அதற்கு முன்பு 2006 ஆம் ஆண்டு நடந்த தேர்தலிலும் திமுக தான் இங்கு வெற்றிகண்டுள்ளது. எனவே சுந்தர் சிக்கு இந்த தேர்தல் சவாலான தேர்தலாகவே தான் அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனாலும் சுந்தர் சி நம்பிக்கையுடன் இந்த தேர்தலை எதிர்கொண்டு வருகின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://x.com/SundarCOffl/status/2043296460620616073

Source link