வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு – மிகுந்த கவலை அடைந்தேன்.. – நயினார் நாகேந்திரன்

சென்னை,

தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் தெரிவித்திருப்பதாவது;-

பாஜக தேசிய மகளிரணியின் தலைவரும், கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் வெற்றி வேட்பாளர் சகோதரிவானதி சீனிவாசன் உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிந்து மிகுந்த கவலை அடைந்தேன்.

தன்னலமற்ற அர்ப்பணிப்புடன் பொதுச்சேவையில் ஈடுபட்டு வரும் அவர், விரைவில் பூரண உடல்நலம் பெற்று, மேலும் உற்சாகத்துடன் தனது தேர்தல் பணிகளிலும் மக்கள் சேவையிலும் மீண்டும் ஈடுபட வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை மனமாறப் பிரார்த்திக்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link