எரிபொருள் நிரப்பும் ‘Fuel Pass app’ செயலிழப்பு

“The Hunger Games: The Sunrise on the Reaping” :

“The Hunger Games: The Sunrise on the Reaping” படத்தின் முதல் காட்சிகளை Lionsgate நிறுவனம் வெளியிட்டுள்ளது. எல் ஃபேன்னிங் ((Elle Fanning)) , கீரன் கல்கின் ((Kieran Culkin)) உள்ளிட்டோர் நடிப்பில் பிரான்சிஸ் லாரன்ஸ் இயக்கத்தில், “த ஹங்கர் கேம்ஸ்” தொடரின் 6-வது திரைப்படமாக “The Hunger Games: The Sunrise on the Reaping” உருவாகியுள்ளது.

நவம்பர் 20-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முதல் காட்சிகளை Lionsgate நிறுவனம் வெளியிட்டு, ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்துள்ளது.

தந்தையின் வேனுக்குள் அடைத்து வைக்கப்பட்ட சிறுவன் :

கிழக்கு பிரான்சின் ஹேகன்பாக் ((Hagenbach)) கிராமத்தில் தந்தையின் சரக்கு வேனுக்குள் அடைத்து வைக்கப்பட்டிருந்த 9 வயது சிறுவனை போலீசார் மீட்டனர். கடந்த 2024 முதல் குப்பை மற்றும் மலக்கழிவுகளுக்கு இடையில் நிர்வாண நிலையில் கிடந்த சிறுவனை போலீசார் மீட்டனர்.

சிறுவன் கடும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும், ஒரே நிலையில் இருந்ததால் நடக்க முடியாத நிலையிலும் உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து கொடூர தந்தையிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரஷ்ய அதிபர் புதின் சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்பு :

உலகம் முழுவதும் உள்ள ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பெருநாளை கோலாகலமாக கொண்டாடினர். பழைய ஜூலியன் நாட்காட்டியைப் பின்பற்றும் ஆர்த்தோடக்ஸ் கிறிஸ்தவர்கள் இன்று ஈஸ்டர் பெருநாளை கொண்டாடுகின்றனர். அந்த வகையில் மாஸ்கோவில் உள்ள பேராலயத்தில் இரவு முழுவதும் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் அதிபர் விளாடிமிர் புதின் கலந்து கொண்டார்.

எரிபொருள் நிரப்பும் ‘Fuel Pass app’ செயலிழப்பு :

வங்கதேசத்தில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் “Fuel Pass” app செயலிழந்ததால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினார். வங்கதேசத்தில் பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக “Fuel Pass” app அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அசாத்கேட் ((Asadgate)) மற்றும் பிஹாரி முகாம் ((Bihar camp area)) பகுதிகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக Fuel Pass app செயலிழந்தது. இதனால், நூற்றுக்கணக்கான வாகன ஓட்டிகள், எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

Source link