எனவே தான் தேர்தல் பரப்புரை தற்போது போர்க்களமாக மாறியிருக்கின்றது. மாறி மாறி தாக்கி பேசி விமர்சித்துக்கொண்டும் பதிலடி கொடுத்ததும் வருகின்றனர். இந்நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின் பரமக்குடியில் தனது பரப்புரையை மேற்கொண்டு வருகின்றார். அந்த பரப்புரையில் எடப்பாடி பழனிசாமியை அட்டாக் செய்து பேசியிருந்தார் முதலமைச்சர் முக ஸ்டாலின்.
அவர் பரமக்குடியில் பேசியது, தமிழகத்தை ஒன்றிய அரசு வஞ்சித்து வருகின்றது. தமிழகத்தை பாஜக பலவகையில் தண்டித்து வருகின்றனர். எனவே பாஜகவின் இந்த அநியாயத்தை எதிர்த்து இந்தியாவில் இருக்கும் அனைத்து ஜனநாயக கட்சிகளும் போராட்டம் நடத்த போகின்றோம். எடப்பாடி பழனிச்சாமி எதிர்பாரா ?தமிழகத்திற்கு நடக்கும் அநியாயங்களை எதிர்த்து பாஜகவை கேள்விகேட்கும் துணிச்சல் எடப்பாடி பழனிசாமிக்கு இருக்கின்றதா ?விமர்சனம் செய்யச்சொன்னால் செய்வார் ? அதே பாஜகவை கேள்விகேட்க சொன்னால் சைலன்ட் மோடுக்கு போய்விடுவார்.
மோடியையும் அமித் ஷா ஆகியோரை எதிர்த்து பேச சொன்னால் பயந்து சுவிட்ச் ஆப் செய்தது போல ஆகிவிடுவார். அவர் பரப்புரை செய்வதற்கான காரணம் கின்னஸ் சாதனை படைப்பதற்கு தான். இப்படி ஒரு அடிமையை உலகத்திலேயே யாரும் பார்த்ததில்லை என்ற கின்னஸ் சாதனையை படைக்க தான் எடப்பாடி பழனிச்சாமி பரப்புரை செய்கின்றார்.
தற்போது பாஜகதிடீரென தமிழக மக்கள் மீது அக்கறை காட்டுவது போல செய்கின்றனர். இதெல்லாம் வெறும் அரசியல் ஸ்டண்ட் தான் என பேசினார் முதலமைச்சர் முக ஸ்டாலின். மேலும் எடப்பாடி பழனிச்சாமியின் பரப்புரை குறித்தும் பேசினார் முக ஸ்டாலின். மிக மோசமான வார்த்தைகளை பேசி பரப்புரை செய்கின்றார் எடப்பாடி பழனிச்சாமி.
அதற்கெல்லாம் பாடம் புகட்டும் நாள் தான் ஏப்ரல் 23 .மறைந்த தலைவர்களை இழிவுபடுத்துவது, அடுத்தவர்களின் மரணத்தை எதிர்பார்த்து பேசுவது, பெண்களை கண்ணியம் இல்லாமல் பேசுவது என எடப்பாடி பழனிச்சாமி தொடர்ந்து இதுபோன்றே பேசி வருகின்றார். எனவே இதற்கெல்லாம் பாடம் புகட்ட வேண்டும் என முக ஸ்டாலின் பரமக்குடி பரப்புரையில் பேசியிருக்கிறார்.
இந்நிலையில் முதலமைச்சர் முக ஸ்டாலின்தனது ஒவ்வொரு பரப்புரையிலும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் குறித்து மிகவும் பெருமையாக பேசி வருகின்றார். தங்களது தேர்தல் வாக்குறுதிகளை சூப்பர்ஸ்டார் என குறிப்பிட்டு வெற்றி நிச்சயம் என கூறி வருகின்றார் முக ஸ்டாலின். அவர் பேசுவதை பார்க்கும்போதே, திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் மக்களிடையே சிறப்பான முறையில் சென்றடைந்து இருப்பதாகவும், வரவேற்பையும் பெற்று இருப்பதாகவும் தெரிகின்றது.
குறிப்பாக திமுக புதிதாக வெளியிட்டு இருக்கும் இல்லத்தரசி திட்டம் பட்டிதொட்டி எங்கும் சென்றடைந்து இருப்பதாக சொல்லப்படுகின்றது. என்னதான் எதிர்க்கட்சிகள் இல்லத்தரசி திட்டத்தையும் திமுக வாக்குறுதிகளையும் விமர்சித்தாலும் பெரும்பாலான மக்களால் வரவேற்கப்பட்டு இருப்பதாகவே தெரிகின்றது.
