டி20 உலகக்கோப்பை – வரலாற்று சாதனை படைத்த பிரெண்டன் டெய்லர்

சென்னை,

ஜிம்பாப்வே கிரிக்கெட் வீரர் பிரெண்டன் டெய்லர் (Brendan Taylor), 2026 ஐசிசி டி20 உலகக்கோப்பைத் தொடரில் விளையாடுவதன் மூலம் ஒரு வரலாற்று சாதனையைப் படைத்துள்ளார்.

2007-ல் நடந்த முதலாவது டி20 உலகக்கோப்பை மற்றும் தற்போது நடைபெறும் 2026 டி20 உலகக்கோப்பை ஆகிய இரண்டிலும் விளையாடிய முதல் மற்றும் ஒரே வீரர் என்ற பெருமையை் அவர் பெற்றுள்ளார்.

Also Read
கிரிக்கெட் ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்…டி20 உலகக் கோப்பையில் இன்று 3 போட்டிகள்
டி20 உலகக்கோப்பை - வரலாற்று சாதனை படைத்த பிரெண்டன் டெய்லர்

நேற்று ஓமனுக்கு எதிரான உலகக்கோப்பை ஆட்டத்தில் விளையாடியபோது இந்த மைல்கல்லை அவர் எட்டினார். இருப்பினும், அந்தப் போட்டியில் 31 ரன்கள் எடுத்திருந்தபோது தசைப்பிடிப்பு (Hamstring injury) காரணமாக அவர் பாதியிலேயே வெளியேறினார்.

Source link