தேர்தல் பிரச்சாரத்திற்கு தமிழகம் வரும் ராகுல்… திமுக – காங்கிரஸ் உறவில் முன்னேற்றம் – காரணம் என்ன? – rahul gandhi to campaign in tamil nadu is dmk congress alliance strengthening

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் சூடு பிடித்திருக்கிறது. நான்கு முனை போட்டி நிலவிவரக்கூடிய சூழலில் சமீபமாக காலமாகவே திமுக கூட்டணியில் சலசலப்புகள் நீடித்து வருகின்றன.

விஜய் அம்சத்தால் காங்கிரஸில் ஏற்பட்ட குழப்பம்

விஜய்யின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழக சூழலில் ஏற்பட்டது.
குறிப்பாக திமுகவின் மிகவும் நம்பகத்தன்மையான கூட்டாளிகளில் ஒருவரான காங்கிரஸ் கட்சி திமுக மீதான தங்களின் அதிருப்தியை தொடர்ச்சியாக பொதுவெளியில் பேச ஆரம்பித்தனர். இதனால் கூட்டணி இழுபறி வெடித்தது. பேச்சுவார்த்தைகள் கிட்டத்தட்ட மோசமான விளைவுகளுக்கு கூட்டிச் சென்றன. அதன் பிறகும் 28 தொகுதிகளோடு திமுக கூட்டணியில் காங்கிரஸ் நீடித்தது

ஆனால் சமீபத்தில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் காங்கிரஸின் உண்மையான ஆன்மா தங்கள் கட்சியுடன் இருப்பதாகவும் விலை கொடுத்து தமிழக காங்கிரசை திமுக வாங்கி விட்டதாகவும் மோசமான குற்றச்சாட்டை வைத்திருந்தார்.

தேர்தலுக்கு முந்தைய சமயத்தில் இந்த மாதிரியான குற்றச்சாட்டுகள் வாக்கு அரசியலில் பிரதிபலிக்கும் என்பதால் இது மிகவும் பேசுபொருளானது. இந்த சூழலில் இதுகுறித்து காங்கிரஸ் தரப்பினர் சிலர் எதிர்வினை ஆற்றியிருந்தனர்.

ராகுலின் செயல்பாடுகளால் திமுக அதிருப்தி

விஜய்யின் பேச்சை ஊர்ஜிதப்படுத்தும் விதமாக ராகுல் காந்தி புதுச்சேரியை தேர்தல் பரப்புரையை தனியாக மேற்கொண்டார். மேலும் கூட்டணியில் இருந்தபோதும் திமுக வேட்பாளர்களை மேடையற்றாமல் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு மட்டும் வாக்கு சேகரித்தார்.

முன்னதாக புதுச்சேரியில் திமுக களம் காணும் அதே தொகுதியில் காங்கிரஸ் கட்சியினரும் களம் கண்டனர் நட்பு ரீதியாக சண்டை என இது வர்ணிக்கப்பட்டாலும் இது வெற்றியை சிதைக்கும் என திருமாவளவன் உள்ளிட்ட பல தலைவர்கள் அதிருப்தி வெளிப்படுத்தியிருந்தனர்.

இந்த சூழலில்தான் சென்னை சத்தியமூர்த்திபவனில் சட்டமன்ற தேர்தலுக்காக காங்கிரஸ் கொள்கை முழக்க பிரச்சார பாடலை மேலிட பார்வையாளர் முகுல் வாஸ்னிக் வெளியிட்டார்

இந்நிகழ்வில் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். “அடுத்த இரண்டு மூன்று நாட்களில் காங்கிரஸ் கட்சியில் தேசிய தலைவர்கள் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்வது குறித்த அட்டவணை வெளியாகும்” என பேசினார்.

மேலும் உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் த.வெ.க பக்கம் நிற்பார்கள் என விஜய் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு, “உண்மையான காங்கிரஸ் தொண்டர்கள் எப்போதுமே காங்கிரஸ் கட்சியின் பக்கம் தான் நிற்பார்கள் என பதில் அளித்துள்ளார்.

திமுக காங்கிரஸ் கூட்டணியில் ராகுல் அதிருப்தியா என்ற கேள்விக்கு, இது தவறான கருத்து, பொய்யை பரப்புகின்றனர் எனவும் கிரிஷ் பதில் அளித்துள்ளார். ஓரிரு நாளில் காங்கிரஸ் கட்சி தேசிய தலைவர்கள் தமிழக பிரச்சாரம் குறித்தான அட்டவணை வெளியாகும் என தெரிவித்த அவர், ராகுல் காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவாரா என கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் இரண்டு மூன்று நாட்களில் தேசிய தலைவர்கள் தமிழ்நாட்டில் பிரச்சாரம் மேற்கொள்வது தொடர்பான அட்டவணை வெளியாகும் என தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கான வியூகமா?

இந்த சூழலில் தான் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் தொடங்கர் இப்படி பேசி இருப்பது பலவிதமான கேள்விகளை எழுப்பி இருக்கிறது.

ஆனால் சில தரவுகள் தேர்தல் சமயத்தில் காங்கிரஸ் தனது அதிருப்தியை தேர்தல் சமயம் என்பதால் முரண்பாடுகளை வெளியில் காண்பிப்பது வெற்றிக்கு பாதகத்தை விளைவிக்கும் என்பதால் காங்கிரஸ் தலைமை சுமூகமாக கையாளுவதாக சொல்லப்படுகிறது.

Source link