4 வது முறையாக போட்டியிடும் செல்லூர் ராஜூ
குறிப்பாக கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுக ஆட்சியில் கூட்டுறவு துறை அமைச்சராக பதவியில் இருந்தவர். தற்போது அதிமுக மாவட்டம் மற்றும் அதிமுக மாநில அமைப்பு செயலாளராக இருந்து வருகிறார். இந்த நிலையில் நான்காவது முறையாக போட்டியிடும் செல்லூர் ராஜு மதுரை மேற்கு தொகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் தமிழ்நாட்டில் பாஜக என்று பட்டித்தொட்டி எங்கும் வளர்ந்துள்ளது என்றால் அதற்கு காரணம் அண்ணாமலையின் சிறப்பான பணி தான்.
திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?
அண்ணாமலை நாளை என்ன அறிக்கை கொடுப்பாரோ என்ன பேட்டி கொடுக்கிறாரோ என மடியில் நெருப்பை கட்டிக்கொண்டு அமைச்சர்கள் இருந்தார்கள் என்று கூறினார். கர்நாடகாவில் ஐபிஎஸ் ஆக இருந்தபோது சிங்கமாக எதிரிகளுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தவர் அண்ணா மலை. மேலும் முத்துராமலிங்க தேவரின் மறு உருவம் அண்ணாமலை என்று கூறினார்.இவரின் பேச்சு அதிமுக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மேற்கு தொகுதி:
இந்த தொகுதியில் முக்குலத்தோர், பிள்ளை, செட்டியார், யாதவர் மற்றும் ஆதி திராவிடர் சமூகத்தைச் சேர்ந்த மக்கள் கணிசமான அளவில் வாழ்ந்து வருகின்றனர். இதில் முக்குலத்தோர் சுமார் 30% மற்றும் பிள்ளைமார் சுமார் 15% இருப்பதால், தேர்தல் முடிவை தீர்மானிக்கும் முக்கிய சமூகங்களாக பார்க்கப்படுகிறது.
மேலும், அங்கன்வாடி மையங்கள், நியாய விலை கடை கட்டிடங்கள், குடிநீர் தொட்டிகள், சிறிய பாலங்கள் அமைத்தல், மாடக்குளம் கண்மாய் புதுப்பித்தல், கொடிமங்கலம் பகுதியில் வைகை ஆற்றில் தடுப்பணை அமைத்தல், காளவாசல் மேம்பாலம் கட்டுதல் மற்றும் முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு மேம்பாட்டு பணிகள் இந்த தொகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இதன் மூலம் தன்னுடை நான்காவது வெற்றியை பதிவு செய்வாரா என்று பொருத்திருந்தான் பார்க்க வேண்டும்.
தமிழ்நாட்டின் அண்ணாமலை வளர்ச்சி
ஜூலை 21 ஆம் ஆண்டு பாஜகவின் மாநில தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றார். தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் தீவிர பிரச்சாரம் செய்வது பாஜக மாநில அரசிலில் ஒரு முக்கிய சக்தியாக மாற்றியதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. குறிப்பாக என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழகம் முழுவதும் நடத்திய பாதயாத்திரை கட்சியின் அடிமட்டத் தொண்டர்களை உற்சாகப்படுத்தியது.
இது பாஜகவின் கொள்கைகளை கிராமப்புற மக்களிடமும் கொண்டு சேர்க்க உதவியது. தொடர்ந் து திமுக மீது அண்ணாமலை கடுமையான விமர்சனங்களை முன் வைத்து வந்தார்.குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் அரசு நிர்வாகத்தில் உள்ள குறைகளை ஆதாரங்களுடன் DMK Files போன்றவை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதன் மூலம் ஒரு தீவிரமான எதிர்க்கட்சித் தலைவராக தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டார்.
தொடர்ந்து பாஜகவில் அதிகாரத்தோடு பேசி வந்தது பாஜக சினியர்களுக்கு பிடிக்கவில்லை என்று கூறப்பட்டது. மேலும், கடந்த தேர்தலில் அதிமுக கூட்டணியில் இருந்து பாஜக விலக காரணம் அண்ணாமலை தான் என்று பாஜக மூத்த தலைவர்கள் விமர்சித்து வந்தனர். இதனைத் தொடர்ந்து, தலைவர் பதவி அண்ணாமலையிடம் இருந்து பறிக்கப்பட்டது.
