தமிழக சட்டமன்ற தேர்தல்
தமிழகத்தில் திமுக ஆட்சியை அகற்றி வேண்டும்.அதேசமயம், ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற முனைப்புடன் தமிழக வெற்றி கழகம் செயல்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த சட்டமன்றத் தேர்தல் திமுகவுக்கும் தவெகவுக்கும் போட்டி என்று விஜய் கூறி வருகிறார். மேலும் 233 தொகுதிகளில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் களம் காண்கிறது. இதற்காக கடந்த மார்ச் 30ம் தேதி தன்னுடைய முதல் வேட்பு மனுவைத் தாக்கல் செய்த அக்கட்சியின் தலைவர் விஜய் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார்.
விஜய் போட்ட மாஸ்டர் பிளான்…களத்தில் நடக்கப்போகும் மாற்றம்?
இதனை தொடர்ந்து சென்னை மற்றும் திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பிரச்சார மேற்கொண்டார். இதனை தொடர்ந்து தென் மாவட்டங்களை டார்கெட் செய்து விஜய் கடந்த ஏப்ரல் ஒன்பதாம் தேதி கடலூர் பிரச்சாரம் நடைபெற இருந்த நிலையில் 11-ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதற்கிடையில், 10ம் தேதி காரைக்குடியில் விஜய் பிரச்சாரம் செய்ய திட்டமிடப்பட்டது. மேலும் வரவேற்பு ஏற்பாடுகளும் நடத்தப்பட்டு இருந்தது.
தீவிர பிரச்சாரத்தில் தவெக தலைவர் விஜய்
ஆனால் விஜய் காலதாமதமாக காரணமாக பொதுமக்களிடம் பேசாமல் சென்றார். இது அங்கு கூடியிருந்த தொண்டர்களிடையே ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து கன்னியாகுமரியில் நேற்று விஜய் பிரச்சாரம் மேற்கொண்டார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமான மூலம் தூத்துக்குடி வந்த அவர், சாலை மார்க்கமாக கன்னியாகுமரிக்கு சென்று பிரச்சாரம் மேற்கொண்டார்.
இந்த நிலையில் மார்ச் 13ஆம் தேதி இன்று கும்மிடிப்பூண்டியில் நடக்கவிருந்த தமிழக வெற்றிக்கழக பிரச்சார கூட்டம் ரத்தாகி உள்ளது. இவ்வாறு காவல்துறை அனுமதி வழங்கிய பிறகும் விஜய் தொடர்ந்து பிரச்சாரங்களை ரத்து செய்து வருவது தவெக தொண்டர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும் அரசியல் வட்டாரத்தில் பேசு பொருளாக மாறி உள்ளது.
கும்மிடிபூண்டி விஜய் பிரச்சாரம் ரத்து
சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒருவார காலமே உள்ள நிலையில், விஜய் தொடர்ந்து பரப்புரையை ரத்து செய்வதற்கான காரணத்தை தள்ளி போடுவதற்கான காரணம் தற்பொழுது வெளியாகி உள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு உடல் நலக்குறைவு இருப்பதாகவும் அவர் சில தினங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவமனை தரப்பில் கூறியதாக தகவல் ஒன்று வெளியானது.
இப்படியான சூழலில் விஜய் கன்னியாகுமரியில் பிரச்சாரத்தை விஜய் நடத்தி முடித்த நிலையில், கும்முடிப்பூண்டியில் நடக்கவிருந்த பிரச்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி கும்மிடி பூண்டியில் விஜய் ரோடுஷோ நடத்த உள்ளதாக கூறப்படுகிறது. மறுபுறம் விஜய் மேற்கொள்ள விருந்த பிரச்சார நாளில் கும்முடிபூண்டியில் முதலமைச்சர் மு க ஸ்டாலினும் திமுக கூட்டணி கட்சிகளை ஆதரித்து பரப்புரை மேற்கொள்ள உள்ளது குறிப்பிடத்தக்கது.
