தமிழ்நாட்டில் இன்றும் நாளையும் அதிமாக வெயில் இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
வானிலை ஆய்வு மையம்
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறுகிறதாவது மேற்கு தொடர்ச்சி மாவட்டங்களான கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வறண்ட வானிலை நிலவக்கூடும்
மேலும் தமிழகத்தின் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை உயரக்கூடும் என்றும், ஒரு சில இடங்களில் இரண்டு அல்லது மூன்று டிகிரி செல்சியஸ் வரை வெயிலின் தாக்கம் படிப்படியாக உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பநிலை உயர்வு
ஆனால் கடலோர பகுதிகளில் வெப்பநிலையில் பெரிய மாற்றம் ஏற்பட வாய்ப்பில்லை. இருப்பினும், அதிக ஈரப்பதம் காரணமாக மக்கள் சற்று அசௌகரியத்தை அனுபவிக்க கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடலோர தமிழக பகுதிகள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால் வெப்பம் அதிகமாக உணரப்படலாம்.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இதனால் பொதுமக்கள் வெளியில் செல்லும்போது கவனமுடன் செல்ல வேண்டும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. சென்னையை பொருத்தவரை இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் அதிகபட்ச வெப்பநிலை சுமார் 36 முதல் 37 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது மேலும் கடலுக்கு செல்லும் மீனவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடப்படவில்லை எனவே அவர்கள் வழக்கம் போல் கடலுக்கு செல்லலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
