சென்னை,
தவெக தலைவர் விஜய் கன்னியாகுமரியில் நேற்று பிராசரம் மேற்கொண்டார். அப்போது பல்வேறு வாக்குறுதிகள் அளித்தார். குறிப்பாக தவெக ஆட்சி அமைந்ததும், சிட்டிசன் அஸ் பார்ட்னர்ஸ் இன் கவர்னன்ஸ் என்ற திட்டம் செயல்படுத்தப்படும். அதில், நமது அரசில் பொதுமக்கள் வெறும் வாக்காளர்களாக மட்டும் இருக்கத் தேவையில்லை. மாறாக பொதுமக்கள் அனைவரும் அரசின் பங்காளர்களாக இருப்பார்கள். ‘மை வெற்றிதமிழ்நாடு.இன்’ என்ற இணையதளம் ஒன்று உருவாக்கப்படும்.
மாநிலத்தின் வளர்ச்சிக்கான யோசனைகளை பொதுமக்களும் முன்வைக்கலாம். கொள்கை முன்மொழிவுகளுக்கு வாக்களிக்கலாம். அரசு சேவைகளை மதிப்பிடலாம். நிதிநிலை அறிக்கை செலவினங்களை கண்காணிக்கலாம். மக்கள் அரங்கம் என்ற திட்டத்தின் மூலம் தமிழக வரலாற்றில் முதன்முறையாக குடிமக்கள் ஒரு டிஜிட்டல் தளம் வழியாக நேரடியாக சட்டமன்றத்தில் மனுக்களைச் சமர்ப்பிக்க முடியும். 10 ஆயிரம் சரிபார்க்கப்பட்ட கையொப்பங்களுடன் ஒரு மனு சமர்ப்பிக்கப்பட்டால் அதற்கு அரசு அதிகாரப்பூர்வ பதிலை அளிக்க வேண்டியது கட்டாயமாக்கப்படும். 5 லட்சம் கையொப்பங்கள் கொண்ட மனு எனில் அதுகுறித்து தமிழக சட்டமன்றத்தில் கட்டாயம் விவாதம் நடத்தப்படும். சட்டமன்ற கூட்டத்தொடரில் முழுநாள் பொதுமக்கள் மனுக்களுக்கு என்று தனி நேரமாக ஒதுக்கப்படும்’ என்று வாக்குறுதி அளித்தார்.
இந்த நிலையில், விஜய் வாக்குறுதிகளை இயக்குனர் சேரன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக சேரன் தனது எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது: தொகுதிக்கு ஓட்டு கேட்டு வரும்போது ஏதாவது பேசுங்க விஜய்னு சொன்னோம் .. ஆனா இப்படி பேசுவார்னு நினைக்கல… பாவம் .. அவருக்கு எம்எல்ஏ-க்கு என்ன வேலைன்னே தெரியல.. ஒவ்வொரு ப்ரச்னைக்கும் கையெழுத்து போட்டு போட்டு கொடுத்துட்டே இருந்தா விடிஞ்சிரும்… சரி விடுங்க… யானை அதன் தலையில் அதுவே…… பெட்டர் லக் டூ நெக்ஸ்ட் டைம் (Better luck to next time). இப்போ தவெக கன்னுக்குட்டிகள் படை சேர்ந்து வந்து கெட்ட கெட்ட வார்த்தைல திட்ட ஆரம்பிப்பாங்க.. நம்ம நம்ம வேலைய பார்க்கலாமா நாதக செயல் வீரர்களே… வெற்றி நம் கையில் வாங்க… விஜய்யின் இன்றைய பேச்சு நமக்கு அறுவடை ஆக வாய்ப்பிருக்கு…” என்று கூறினார்.
