ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் நடப்பு சாம்பியன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதின. இந்த போட்டியில் முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 240 ரன்கள் எடுத்து ஆட்டத்தை முடித்தது. இந்த இமாலய இலக்கை துரத்திய மும்பை இந்தியன்ஸ் அணி 222 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், 18 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு வென்றது. ஆர்.சி.பி வீரர்கள் இந்த வெற்றியை கொண்டாடி வருகின்றனர்.
முன்னதாக, ஆர்.சி.பி அணியின் நட்சத்திர வீரர் கோலி அவுட் ஆகி செல்லும் போது ஹெல்மெட்டை தூக்கி எறிந்த காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இத்தனைக்கும் கோலி அரைசதம் அடித்திருந்தார். சிறப்பாக விளையாடிய போதும் அவர் அவுட் ஆனது கடும் டென்ஷனுக்குக் காரணம், மந்தமாக விளையாடியதே என்று சொல்லப்படுகிறது. அதாவது 38 பந்துகளில் விராட் கோலி 50 ரன்கள் எடுத்தார். அவரது ஸ்டிரைக் ரேட் 131.58 ஆக இருந்தது. மெதுவாக விளையாடிய விராட் கோலி, அரைசதம் அடித்ததும் அதிரடி காட்டி ஸ்டிரைக் ரேட்டை உயர்த்தலாம் என்று நினைத்த நிலையில், அவுட் ஆனது அவருக்கு பெரும் ஏமாற்றத்தை கொடுத்திருக்கலாம். இதனாலேயே கோபத்தை வெளிப்படுத்தும் விதமாக ஹெல்மெட்டை டக் அவுட் பகுதியில் தூக்கி வீசியதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.
மும்பைக்கு எதிரான போட்டியில் ஆர்.சி.பி பேட்ஸ்மேன்களின் ஸ்டிரைக் ரேட்:
பில் சால்ட் – 216.67
விராட் கோலி – 131.58
ரஜத் படிதார் – 265.00
டிம் டேவிட் – 212.50
ஜிதேஷ் சர்மா – 111.11
