நெல்லுக்கு ஊக்கத்தொகை
எங்களுக்கு அனுப்பிய கடிதத்தில், தற்போது மாநில அரசால் தரப்படும் ஊக்கத்தொகையை மறுபரிசீலனை செய்யுமாறும், நெல்லுக்கு இத்தகைய ஊக்கத்தொகை வழங்குவதை நிறுவத்துவது தொடர்பாகப் பரிசீலனை செய்யவும் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். தங்களுடைய இந்தப் பதிவில், “குறைந்தபட்ச ஆதார விலையைத் தாண்டி ஊக்கத்தொகை வழங்குவது மாநில அரசின் முடிவு எனவும், அதனை யாரும் பறிக்கவில்லை” என்றும் கூறியிருக்கிறீர்கள். தங்களது கூற்று உண்மைதானென்றால், அந்தக் கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தாங்கள் தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?
முன்னதாக தஞ்சையில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் பேசிய முதல்வர் மு.க. ஸ்டாலின், நெல்லுக்கு வழங்கப்பட்டு வரும் ஊக்கத்தொகையை நிறுத்த வேண்டும் என்று மத்திய அரசு கடிதம் அனுப்பியதாக தெரிவித்தார். இதைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அந்தக் குற்றச்சாட்டை மறுத்து விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டு இருந்தார்.
அதில், ஊட்டச்சத்து பாதுகாப்பு, சுயசார்பு மற்றும் நிலையான விவசாயம் ஆகிய தேசிய முன்னுரிமைகளுக்கு ஏற்ப, பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க மாநிலங்கள் தங்கள் ஊக்கத்தொகை கொள்கைகளை மாற்றி அமைக்க வேண்டும் என 09.01.2026 அன்று அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும் ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. இது ஒரு ஆலோசனையே தவிர, கட்டாய உத்தரவு அல்ல எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கடிதத்தை வெளியிட தயாரா?
இந்த தகவல் இந்தியாவின் நீண்டகால உணவு பாதுகாப்பையும் பயிர் பாதுகாப்பையும் வலுப்படுத்தும் நோக்கில் வழங்கப்பட்ட நேர்மறையான பரிந்துரையாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது மத்திய அரசு பல பயிர்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை வழங்கி வருகிறது. ஆனால் பல மாநிலங்களில் நெல் மற்றும் கோதுமை பயிரிடுதலுக்கு கூடுதல் ஊக்கத்தொகை வழங்கப்படுவதால், அந்த பயிர்களே அதிகமாக பயிரிடப்படுகின்றன. இதனால் பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் சிறுதானியங்கள் குறைவாக பயிரிடப்படுகின்றன. மேலும் அதிக நீர் மற்றும் உரம் தேவைப்படுவதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுகிறது என்றும், இறக்குமதி சார்பு அதிகரிக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
இதனை தவிர்க்க பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவிப்பதே நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வகை பயிர் சாகுபடியை குறைத்து, பல்வேறு பயிர்களை ஊக்குவிப்பதன் மூலம் விவசாயிகளின் வருமானத்தையும் நாட்டின் உணவு பாதுகாப்பையும் மேம்படுத்தலாம் என கூறப்பட்டுள்ளது. பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்களின் உற்பத்தியை அதிகரிப்பது இறக்குமதி சார்பை குறைக்கும் முக்கிய வழியாகும் என்றும் விளக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு கடிதம்
பருப்பு மற்றும் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி அதிகரிப்பது நாட்டின் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கும் அவசியமானது எனவும், இதன் மூலம் வெளிநாட்டு சந்தை சார்பை குறைக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் இந்த பயிர்களுக்கு ஏற்கனவே நல்ல பாரம்பரியம் இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஏற்கனவே பருப்பு வகைகளுக்கான தன்னிறைவு இயக்கம் எண்ணெய் வித்துக்கள் தேசிய இயக்கம் போன்ற பல திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் எண்ணெய் வித்துக்கள் உற்பத்தி மற்றும் சாகுபடி பரப்பளவு குறிப்பிடத்தக்க அளவில் உயர்ந்துள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விவசாயிகளுக்காக பிரதமர் மோடி கிசான் பயிர் காப்பீட்டு திட்டம் மண் ஆரோக்கிய அட்டைகள் உள்ளிட்ட பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கோடிக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், மாநிலங்களுடன் இணைந்து பயிர் பல்வகைப்படுத்தலை ஊக்குவித்து விவசாயிகளின் லாபத்தையும் தேசிய உணவு பாதுகாப்பையும் மேம்படுத்துவதே மத்திய அரசின் நோக்கம் என செலவினத் துறை விளக்கியுள்ளது. இந்த கடிதத்தை தவறாகப் புரிந்து கொண்டு திணிப்பு என கூறுவது உண்மைக்கு புறம்பானது என்றும் அந்த விளக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
