Flash: பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறிய பட்டாசு ஆலை.. 60 பேரில் நிலை என்ன..? | Tamil News Online | Latest News In Tamil | Breaking News Tamil | Tamil News Live | தமிழ் நியூஸ்

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடித்து விபத்து ஏற்பட்டுள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

சாத்தூர் அருகே மடத்துப்பட்டியில் பட்டாசு ஆலை இன்று வழக்கம் போல் இயங்கி வந்தது. திடீரென பயங்கர சத்ததுடன் 4 முறை வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. ஆலையில் அடுத்தடுத்து பட்டாசுகள் வெடித்துச் சிதறியதால் சுற்றுவட்டாரப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

வெடிவிபத்து ஏற்பட்ட பட்டாசு ஆலையில் 60க்கு மேற்பட்டோர் பணியில் இருந்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Source link