திருமலை,
திருப்பதி ஏழுமலையானை ஜூலை மாதம் வழிபட ஆர்ஜித சேவை, இதர தரிசன டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக, தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஆர்ஜித சேவை டிக்கெட்டுகள்
திருப்பதி ஏழுமலையானை வருகிற ஜூலை மாதத்தில் வழிபட பல்வேறு தரிசன டிக்கெட்டுகள், தங்கும் இட ஒதுக்கீடுகளை தேவஸ்தானம் வெளி யிட்டுள்ளது.
அதன் விவரம் வருமாறு:-
சுப்ர பாதம், தோமாலை, அர்ச்சனை மற்றும் அஷ்டதள பாத பத்மாரா தனை சேவை போன்ற ஆர்ஜித சேவை டிக்கெட்டுகளுக்கான ஒதுக்கீடு வருகிற 18-ந்தேதி காலை 10 மணிக்கு இணையவழியில் வெளியிடப் படும்.
இந்தச் சேவைகளுக்கான ‘மின்னணு குலுக்கல்’ முறையில் பதிவு செய்ய, பக்தர்கள் வருகிற 20-ந்தேதி காலை 10 மணி வரை விண்ணப்பிக்கலாம்.
குலுக்கல் முறையில் டிக்கெட் ஒதுக்கப்பட்டவர்கள் 20 முதல் 22-ந்தேதி வரை மதியம் 12 மணிக்குள் அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண் டும். அதன் பின்னரே டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படும்.
கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை. ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ர தீப அலங்கார சேவை ஆகியவற்றுக்கான டிக்கெட்டுகள் 21-ந்தேதி காலை 10 மணிக்கு இணையவழியில் வெளியிடப்படும்.
அங்கப்பிரதட்சண டோக்கன்கள்
அங்கப்பிரதட்சணத்துக்கான டோக்கன்கள் 23-ந்தேதி காலை 10 மணிக்கு இணையவழியில் வெளியிடப்படும். ஸ்ரீவாணி அறக்கட்டளை தரிசன டிக் கெட்டுகளுக்கான ஒதுக்கீடு 23-ந்தேதி காலை 11 மணிக்கு வெளியிடப் படும்.
மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட பக்தர்களுக்கான இலவச சிறப்பு தரிசன டோக்கன்கள் 23-ந்தேதி மாலை 3 மணிக்கு இணையவழியில் வெளியிடப்படும். சிறப்பு நுழைவு தரிசனத்துக்கான (ரூ.300 டிக்கெட்டுகள்) ஒதுக்கீடு 24-ந்தேதி காலை 10 மணிக்கு இணையவழியில் வெளியிடப்படும்.
திருமலை, திருப்பதியில் தங்கும் வசதி
திருமலை மற்றும் திருப்பதியில் தங்கும் வசதிக்கான (அறைகள்) ஒதுக்கீடு 24-ந்தேதி மாலை 3 மணிக்கு இணையவழியில் வெளியிடப்பட உள்ளது. எனவே பக்தர்கள் ஆர்ஜித சேவைகள், தரிசன டிக்கெட்டுகள் மற்றும் தங்கும் வசதிகளை தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையதளமான https://ttdevasthanams.ap.gov.in வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
