பாஜகவால் புறக்கணிக்கப்பட்டவர்.. நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.. அண்ணாமலைக்கு செந்தில் பாலாஜி பதிலடி – dmk senthil balaji reply to bjp annamalai comment against him

பாஜக முன்னாள் தலைவர் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாத நிலையில், அவர் நானே இந்த முறை தேர்தலில் போட்டியிட விருப்பமில்லையென கட்சி தலைமையிடம் கூறி விட்டதாக தேர்தலில் போட்டியிடாதது குறித்து விளக்கம் அளித்தார். இதனிடையில் அவர் வேண்டுமென்றே பாஜகவால் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறார். தேர்தலுக்கு பிறகு அவர் கட்சியில் இருப்பாரா என்றே தெரியவில்லை என எதிர்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள்.

அண்ணாமலை விமர்சனம்
இந்நிலையில் அண்ணாமலை தன்மீது வைத்த விமர்சனங்களுக்கு செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் அவர் வீதிதோறும் தீவிரமான வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த செந்தில் பாலாஜியிடம், அண்ணாமலையின் விமர்சனம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு, மக்களால் புறக்கணிக்கப்பட்டு இரண்டு தேர்தல்களில் வெற்றி வாய்ப்பை இழந்தவருக்கு பதில் சொல்ல நான் விரும்பவில்லை.

செந்தில் பாலாஜி பதிலடி
ஐந்து தேர்தலில் நின்று, அதில் அனைத்திலும் நான் ஜெயித்திருக்கிறேன். ரோபோ யாரு? பேட்டரி யாரு? என்பதெல்லாம் மக்களுக்கு தெரியும். இரண்டு தேர்தலிலும், அந்த கட்சியாலும் புறக்கணிக்கப்பட்டவர் குறித்து பேசி என் நேரத்தை நான் வீணடிக்க விரும்பவில்லை. டைம் வேஸ்ட் ஆகுது என கடுமையாக பதிலடி கொடுத்துள்ளார் செந்தில் பாலாஜி .

தொகுதி மாறி போட்டி
கரூர் எம்எல்ஏவான செந்தில் பாலாஜி இந்த முறை தொகுதி மாறி கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட உள்ளார். இதன் காரணமாக அதிமுக கோட்டையான கோவையில் திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது. இதனிடையில் கோவை தெற்கில் போட்டியிடவுள்ள செந்தில் பாலாஜி மீது கடும் விமர்சனங்களை முன்வைத்து வருகிறார் அண்ணாமலை. கரூரில் இருந்து தோல்வி பயத்தால் செந்தில் பாலாஜி தொகுதி மாறி கோவைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

வானதி சீனிவாசன்
அதோடு தேர்தலுக்கு பிறகு பேட்டரியை கழட்டி கரூர் ரோபோவை கோவைக்கு திருப்பி அனுப்பி விடுவார்கள் என்றும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார் அண்ணாமலை. அவருடைய இந்த பேச்சுக்கு தற்போது செந்தில் பாலாஜி பதிலடி கொடுத்துள்ளார். இதனிடையில் கோவை தெற்கு தொகுதி சிட்டிங் எம்எல்ஏவாக இருந்த வானதி சீனிவாசன் தற்போது தொகுதி மாறி கோவை வடக்கில் போட்டியிடுகிறார். அவர் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.

கோவைக்கு புதிய திட்டங்கள்
அவர் குறித்து செந்தில் பாலாஜி பேசுவையில் நேரடியாக வானதி சீனிவாசனிடம் பேச முடியவில்லை. அவருடன் இருந்தவர்களிடம் பேசினேன். நன்றாக இருக்கிறார். இன்னும் சில நாட்களில் வானதி சீனிவாசன் பரப்புரைக்கு வந்து விடுவார் என தெரிவித்துள்ளார். மேலும். கோவைக்கு பல திட்டங்களை கொண்டு வரப்போவதாகவும், அதுப்பற்றிய அறிவிப்பினை விரைவில் வெளியிட போவதாகவும் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.

அதிமுக அம்மன் அர்ஜுனன்
கடந்த முறை கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவை சார்ந்த அம்மன் அர்ஜுனன், இந்த முறை தெற்கில் போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து தான் செந்தில் பாலாஜி போட்டியிடவுள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் கோவை மாவட்டத்தில் உள்ள பத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை தவற விட்டது திமுக. இந்நிலையில் இந்த முறை கோவையில் அனைத்து தொகுதிகளிலும் திமுக வெற்றி பெறும் என்று செந்தில் பாலாஜி நம்பிக்கையுடன் கூறி வருவது குறிப்பிடத்தக்கது.

Source link