டாக்டர் ராமதாஸ் உடல்நலம் குறித்து கேட்டறிந்த மு.க.ஸ்டாலின்

சென்னை,

பா.ம.க. தலைமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலத்தில் நேற்று பிரசாரம் மேற்கொண்டு இருந்தபோது பாமக நிறுவனத் தலைவர் டாக்டர் ராமதாஸ் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

டாக்டர் ராமதாசின் உடல்நிலை குறித்து முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு நலம் விசாரித்தார். மேலும், டாக்டர் ராமதாஸ் விரைந்து பூரண குணமாக வேண்டும் என்றும், குணமாகி வருவதை கண்டு மகிழ்ச்சி கொள்வதாகவும் தெரிவித்தார். தனது உடல் நலனில் அக்கறை கொண்டு பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு டாக்டர் ராமதாஸ் நன்றி தெரிவித்தார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link