சேலம் மருத்துவமனையிலிருந்து பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாமக நிறுவனர் ராமதாஸ் மருத்துவமனை அனுமதி
இதில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் வரது மகள் காந்திமதி , ஜி.கே. மணி உள்ளிட்டோர் பலர் கலந்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் தான் நிற்கவைத்த வேட்பாளருக்கு ஆதரவாக ராமதாஸ் உரையாற்றியுள்ளார்.பின்னர் நிர்வாகிகள் பேசிக் கொண்டிருந்த போது பாமக நிறுவனர் ராமதாஸ் நிலைத்தடுமாறி கீழே விழுந்தார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது மகன் மற்றும் பாமக நிர்வாகிகள் உடனடியாக மருத்துவர் ராமதாஸை தூக்கி கொண்டு மருத்துவமனைக்கு சென்றது பாமகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?
இதனைத் தொடர்ந்து, சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதித்தனர். ஐசியூவில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டதும் மூத்த மருத்துவர்கள் குழு அவரது இதய துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக்க தீவிரமாக சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து மருத்துவர் கண்காணிப்பில் ராமதாஸ் இருந்து வருகிறார். முன்னதாக கடந்த 2013ஆம் ஆண்டு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதன் பிறகு சமீபத்தில் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் முறையான பரிசோதனைகளை மேற்கொண்டு வருகிறார்.
பிரச்சார கூட்டத்தில் மயங்கி விழுந்த ராமதாஸ்
இந்த நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மூத்த இதய சிகிச்சை நிபுணர் மருத்துவர்கள் கொண்ட குழு அவரை கண்காணித்து வந்தது. அப்போது ராமதாசுக்கு ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது முதலமைச்சரின் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமலஹாசன் பாஜக மாநில தலைவர் நயனார் நாகேந்திரன் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் ராமதாசை மருத்துவமனையில் நேரில் வந்து நலம் விசாரித்தனர்.
சேலத்தில் இருந்து சென்னை மருத்துவமனைக்கு மாற்றம்
இந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் 85 வயதாகியும் அரசியலில்துடிப்புடன் செயல்பட்டு வந்தார். இந்த நிலையில்,
நேற்று அவர் திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பாமக தொண்டர்களுக்கு பதற்றத்தை ஏற்படுத்தியது. பின்னர் பரிசோதனையில், அவரது ரத்தத்தில் சர்க்கரை அளவு திடீரென குறைந்ததே மயக்கத்திற்குக் காரணம் என தெரியவந்தது. அதோடு, அதிக வெப்பம் காரணமாக ஏற்பட்ட நீர்ச்சத்து குறைபாடும் இதற்கு ஒரு காரணமாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், ராமதாஸ் நலமுடன் உள்ளார். 2 நாட்கள் ஓய்வுக்கு பின்பு மீண்டும் பரப்புரைக்கு போகலாம் என மருத்துவர் ராஜேஷ் தெரிவித்தார். இந்த நிலையில், சேலம் மருத்துவமனையில் இருந்து சென்னைக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் அழைத்து வரப்பட உள்ளார்.
