தமிழகத்தில் தேர்தல் தேதி நெருங்கும் நிலையில் அரசியல் களம் அனல் பறந்து வருகிறது.. அந்த வகையில் நெல்லை மாவட்டம் கங்கை கொண்டானில் திமுக எம்.பி கனிமொழி திமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.. அப்போது பேசிய அவர் “ நமது பிள்ளைகள் படிக்கக் கூடாது என்று புதிய கல்விக் கொள்கையை கொண்டு வரும் பாஜக அரசை கண்டித்து ஒருவார்த்தை பேசாத எடப்பாடி பழனிசாமி தமிழ்நாட்டிற்கு நிறைய திட்டங்களை கொண்டு வருவதாக கூறகிறார்.. அவர் ஆட்சியில் இருந்த போது தமிழ்நாட்டிற்கு எதிரான திட்டங்களை தான் அவர் கொண்டு வந்தார்.
அவரை வழக்கில் இருந்து காப்பாற்ற நிறைய திட்டங்களை கொண்டு வந்தார்.. எடப்பாடி பழனிசாமி யாருடைய காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கினால் அவர்கள் பத்திரமாக இருக்க வேண்டும்.. சசிகலா அம்மையார் காலில் விழுந்து தான் முதல்வர் பதவி வாங்கினார். பெரியவர்கள் காலில் விழுந்தால் என்ன என்று அவரே இருக்கிறார்..
ஆனால் எந்த கால் உங்களை ஆசீர்வாதம் செய்ததோ அந்த காலுக்கே அதிமுக அலுவலகத்தில் நுழைய முடியாத அளவுக்கு உள்ளது.. அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை.. சசிகலாவுக்கே இன்று அதிமுகவில் இடமில்லை.. தன்னை காப்பாற்றியவர்கள் தன்னுடன் இருந்தவர்கள் என அத்தனை பேருக்கும் துரோகம் செய்தவர் தான் எடப்பாடி பழனிசாமி.” என்று தெரிவித்தார்..
முகத்தில் வீசப்பட்ட செல்போன்.. கண்கலங்கி நின்ற அண்ணாமலை.. பிரச்சாரத்தில் பரபரப்பு..!
Next Post
Mon Apr 13 , 2026
Hapur accident: Six people were killed and many others injured in a horrific collision between a bus full of wedding guests and a lorry in Hapur.

