2026 சட்டமன்ற தேர்தல்: சேப்பாக்கம், துறைமுகம்,ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவிற்கு ஆதரவு அலை! – dmk sees strong support in chepauk, harbour and thousand lights ahead of 2026 assembly elections

2026 சட்டமன்ற தேர்தலில் சேப்பாக்கம், துறைமுகம்,ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக வெற்றி பெறுவதற்கான வாய்க்கள் 60% வரை இருப்பதாக பல்வேறு தரவுகள் தெரிவிக்கின்றன.

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் பத்து நாட்களே இருக்கக்கூடிய சூழலில் திமுக தேர்தல் பிரச்சாரத்தில் ஃபுல் வோல்டேஜ் இல் இயங்கி வருகிறது. கடந்த மாதம் இறுதியில் திமுக வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் சென்னையில் போட்டியிடக் கூடிய திமுக வேட்பாளர்கள் யார் என்பது கவனம் பெற்றது.

சென்னை வேட்பாளர் பட்டியல்

திமுக சென்னையில் நல்ல செல்வாக்குடன் விளங்கி வருகிறது. தொடர்ந்து சென்னையில் ஆலந்தூர் தொகுதியில் தாமோ.அன்பரசன் சோழிங்கநல்லூர் தொகுதியில் அரவிந்த் ரமேஷ்,மயிலாப்பூர் தொகுதியில் தா.வேலு தி நகர் தொகுதியில் ராஜா அன்பழகன், ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலன் நாகராஜன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு, ராயபுரம் தொகுதியில் சுபேர்கான், திரு.வி.க நகர் தொகுதியில் கே.எஸ் ரவிச்சந்திரன், எழும்பூர் தொகுதியில் தமிழன் பிரசன்னா, பெரம்பூர் தொகுதியில் ஆர்.டி சேகர் உள்ளிட்டோர் போட்டியிடுவதாக திமுக அறிவித்திருந்தது.

தலைநகரில் வெல்லுமா திமுக?

திமுக கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் மிக முக்கியமான ஒரு வெற்றியை பதிவு செய்தது. அந்த வகையில் தமிழகத்தின் தலைநகரமான சென்னையில் திமுகவிற்கு இம்முறை போட்டி வலுத்திருப்பதாக சொல்லப்பட்டாலும் மக்களுக்கான ஆதரவு அலை ஓயவில்லை. அதிலும் குறிப்பாக துறைமுகம், திருவெல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுக -வின் வெற்றி வாய்ப்பு அமோகமாக இருப்பதாகவே கருத்துக்கணிப்புகள் சொல்லப்டுகின்றன.

துறைமுகம் தொகுதி
  • கடந்த 2016 ஆம் ஆண்டு தேர்தல் 2021 ஆம் ஆண்டு தேர்தல் 2 தேர்தல்களிலும் துறைமுகம் தொகுதியில் திமுக தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றிருக்கிறது.
  • துறைமுகம் தொகுதியில் அமைச்சர் சேகர்பாபு சிட்டிங் எம்எல்ஏவாக இருந்து வருகிறார்.
  • 2026 சட்டமன்றத் தேர்தலிலும் சேகர்பாபு தான் திமுக சார்பில் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
  • 1.16 லட்சம் வேட்பாளர்களைக் கொண்ட துறைமுகம் தொகுதியில் போக்குவரத்து நெரிசல் பிரச்சனை பார்க்கிங் பிரச்சினை ஆகியவை இருக்கின்றன.
  • ஏற்கனவே அங்கு இருக்கக்கூடிய பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் 800 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டிருக்கிறது ஆனால் மீதம் இருக்கக்கூடிய மக்களுக்கும் வீடுகளை கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • இந்த தொகுதியில் அதிமுக வேட்பாளராக ராயபுரம் மனோ போட்டியிடுகிறார். தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பி.எஸ் அசோக் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் செரிப் போட்டியிடுகிறார்.

கள நிலவரம் என்ன?

மக்கள் மனநிலை குறிப்பாக இளைஞர்கள் மனநிலை தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வருகை பிறகு சற்றே மாறி இருக்கிறது என்றாலும் திமுகவின் பாரம்பரிய ஓட்டுக்கள் துறைமுகம் பகுதியில் அப்படியே தக்கவைக்கப்பட்டு இருக்கிறது. திமுகவின் கோட்டையாக அறியப்படும் துறைமுகம் தொகுதியில் சேகர்பாபு தொடர்ச்சியாக மக்களை சந்தித்து வருவதாகவும் திமுகவிற்கான வெற்றி வாய்ப்பு இந்த தொகுதியில் அதிகமாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.

சேப்பாக்கம் தொகுதி
  • சேப்பாக்கம் தொகுதியில் கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை திமுக தொடர்ச்சியான வெற்றிகளை பெற்றிருக்கிறது.
  • இந்த முறையும் சேப்பாக்கம் தொகுதி திமுக வேட்பாளராக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.
  • அதிமுக சார்பில் ஆதிராஜாராம், தமிழக வெற்றி கழகம் சார்பில் செல்வம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஆயிஷா பேகம் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
  • திருவல்லிக்கேணி தொகுதியில் அதிகப்படியான இஸ்லாமியர் வாக்குகள் இருக்கின்றன.
  • கிட்டதட்ட 80 சதவீதம் மக்கள் திமுகவிற்கு சாதகமாகவே தங்களின் நிலைப்பாட்டை முன் வைத்து வருகின்றனர்.
  • ஆனால் ஒரு சில வாக்காளர்கள் மாற்ற வரவேண்டும் என்ற எண்ணத்தில் தமிழக வெற்றிக்கழகத்தை ஆதரிக்கின்றனர்
  • திருவல்லிக்கேணி பொறுத்தவரையில் திமுகவின் வெற்றி வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்படுகிறது.
ஆயிரம் விளக்கு தொகுதி

  • ஆயிரம் விளக்கு தொகுதியில் எழிலன் நாகநாதன் 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றார்.
  • மருத்துவத்துறையை சேர்ந்த இவர் தொடர்ச்சியாக தனது தொகுதி மேம்பாடு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்.
  • மேம்பால பணிகள், கழிவுநீர் வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றுவது மூலம் தொடர்ச்சியாக ஆயிரம் விளக்கு சட்டமன்ற தொகுதி மக்களின் நன்மதிப்பை பெற்றவராக விளங்குகிறார்.
  • அவரை எதிர்த்து அதிமுக சார்பில் வளர்மதி களம் காண்கிறார், நாம் தமிழர் கட்சி சார்பில் களஞ்சியம் போட்டியிடுகிறார்.தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜே சி டி பிரபாகரன் களம் காண்கிறார்.

    திமுக 10 முறை வென்ற தொகுதி…இந்த முறை யாருக்கு?

ஆயிரம் விளக்கு தொகுதியில் திமுகவிற்கு கிட்டத்தட்ட 70 சதவீதம் ஆதரவு இருந்தாலும் அதிமுக சார்பில் களம் காண்பவர் முன்னாள் அமைச்சரும் அதிமுகவின் மூத்த நிர்வாகிகளில் ஒருவருமான வளர்மதி. அவர் கடுமையான போட்டியை ஏற்படுத்துவார் என சொல்லப்படுகிறது. மேலும் ஜேசிடி பிரபாகரும் ஓரளவுக்கு வாக்குகளை உடைக்க வாய்ப்பு இருப்பதாக சொல்லப்படுகிறது.

ஒட்டுமொத்த கள நிலவரத்தை வைத்து பார்க்கும் போது சேப்பாக்கம், துறைமுகம், ஆயிரம் விளக்கு ஆகிய தொகுதிகளில் திமுகவிற்கு வெற்றி வாய்ப்பு கணிசமாக உள்ளதை பார்க்க முடிகிறது. அதோடு தமிழக வெற்றிக்கழகத்திற்கும் ஓரளவிற்கு ஆதரவு நிலைப்பாடு கிளம்பி இருப்பது மக்கள் மத்தியில் இருந்து கேட்க முடிகிறது. ஆனால் 2026 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்னரே நிலவரம் உறுதியாகும்.