மூடநம்பிக்கையின் உச்சம்.. பாம்பு கடித்து சிறுவனை கங்கை நீரில் மிதக்கவிட்ட குடும்பம்- கடைசியில் நேர்ந்த கதி! – uttar pradesh snake bite boy death due to superstition incident

இந்தியா உலக நாடுகள் மத்தியில் வளர்ந்து வரும் நாடாக உள்ளது.விஞ்ஞானத்தில் அடுத்தக்கட்ட நகர்வுகளை நோக்கி நகர்ந்துக் கொண்டு இருக்கிறது.ஆனால், இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் மூட நம்பிக்கையில் நடக்கும் சடங்குகள் இன்றளவிலும் நடைபெற்று வருகிறது.அதனை நிருபிக்கும் வகையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது.பாம்பு கடித்த சிறுவனை கங்கை ஆற்றில் குடும்பத்தினர் மிதக்கவிட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இந்த சம்பவம் எங்கு நடந்தது என்பதை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

வயலுக்கு சென்ற நான்கு வயது சிறுவன்

உத்தரப் பிரதேச மாநிலம் அம்ரோஹா மாவட்டத்தில் அமைந்துள்ளது பிட்டாம்பூர் கிராமம். இந் த கிராமத்தில் தினக்கூலியாக வேலை செய்து வாழ்ந்து வருபவர்கள் மகாந்த் மற்றும் அவரது மனைவி பாலா தேவி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ள நிலையில் இளைய மகன் அமித். இவருக்கு வயது 13. இந்த நிலையில் வியாழக்கிழமை அன்று மாலை சுமார் 6 மணியளவில் பசுவிற்கு புல் அறுக்க தன்னுடை விவசாய நிலத்திற்கு சிறுவன் அமித் சென்றுள்ளார்.

விஜய் போட்ட மாஸ்டர் பிளான்…களத்தில் நடக்கப்போகும் மாற்றம்?

அப்போது வயலில் புல் அறுத்துக்கொண்டிருந்த போது, வயலில் மறைந்திருந்த பாம்பு ஒன்று சிறுவன் அமித்தை கடித்துள்ளது. இதனை பெரிதும் கண்டுக்கொள்ளாத அமித் 3 மணி நேரம் கழித்து வீட்டிற்கு சென்றுள்ளார்.பின்னர் சோர்வாக இருந்தத்தை பார்த்து பெற்றோர் கூறிய கேட்டப்போது அமித் தனக்கு நேர்ந்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.பின்னர் மயங்கி விழுந்துள்ளார்.

சிறுவனை பாம்பு கடித்த சம்பவம்

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுவன் அமித்தை பெற்று உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லாத குடும்பத்தினர் மூடநம்பிக்கையை நம்பி பக்கத்து சம்பல் மாவட்டத்தின் கர்தக்ரானி கிராமத்தில் உள்ள மந்திரவாதியிடம் அழைத்துச் சென்றனர்.அங்கு சிறுவனை வைத்து மாந் திரகப் பூஜை நடத்தியுள்ளனர். ஆனால்,சிறுவனின் உடலில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இதனைத் தொடர்ந்து மற்றொரு இடத்திற்கும் அழைத்து சென்று சிறுவனுக்கு சடங்குகள் செய்தனர். இதற்கிடையில் விஷம் உடல் முழுவதும் வேகமாக பரவியது.

இதனையடுத்து,சிறுவனின் உடலை கங்கைநீரில் முழ்கடித்தால் பாம்பு விஷத்தை நீக்கும் என்று உள்ளூர் மக்கள் கூறியுள்ளனர். பின்னர் மூட நம்பிக்கை நம்பி சிறுவனை வெள்ளிக்கிழமை காலை சுமார் 9 மணியளவில் கட்டைகளிகளில் கட்டி கங்கை நதியில் மிதக்க வைத்தனர். சுமார் 12 மணி நேரம் தண்ணீரில் சிறுவன் கட்டப்பட்டபடியே இருந்தார்.இருந்தும் எந்த முன்னேற்றமும் இல்லை என்பதை அறிந்த குடும்ப உறுப்பினர் உத்தரப் பிரதேசத்தின் புலந்த்ஷஹர் மாவட்டம் சியானா பகுதியில் உள்ள ஒரு பாரம்பரிய வைத்தியரிடம் கொண்டு சென்றனர்.

மூட நம்பிக்கையில் பெற்றோர் செய்த கொடூரம்

அங்கு பரிசோதனை செய்ததில் சிறுவனின் உடல்நிலை மிகவும் மோசமடைந்த நிலையில் சிறுவன் உயிரிழந்தார்.அதன்பிறகு, இறந் த சிறுவனின் உடலை மீண்டும் அம்ரோஹாவிற்கு கொண்டு வந்து பிற்பகல் 2 மணியளவில் கங்கை நதியில் மூழ்கடித்தனர்.இது குறித்து சிறுவனின் தாய் பாலா தேவி கூறுகையில் மூன்று நாட்களாக எங்கள் மகனை எடுத்து சுற்றிக்கொண்டு இருந்தோம். இது எங்கள் முன்னோர்களின் காலத்திலிருந்தே வந்த நடைமுறை. தன்னுடைய மகன் மீண்டு வருவான் என்ற நம்பிக்கையில் இதுபோன்ற செயலை செய்ததாக கூறினார்.

இதுகுறித்து அம்மாவட்ட மருத்துவமனை நிர்வாகம் கூறுகையில் சிறுவனை எந்த அரசுமருத்துவமனைக்கும் கொண்டு வரவில்லை. கங்கை நதியில் கட்டிய சம்பவத்தை ஊடகங்கள் மூலம் தான் அறிந்தேன். மூடநம்பிக்கை காரணமாகவே இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.இந்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Source link