சென்னை,
தாம்பரத்தில் இருந்து சந்திரகாச்சி செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06075), வருகிற ஏப்ரல் 14,21 மற்றூம் 28 ஆகிய (செவ்வாய்க்கிழமைகளில்) தாம்பரத்தில் இருந்து காலை 10.15 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மாலை 6.30 மணிக்கு சந்திரகாச்சி சென்றடையும்.
மறுமார்க்கத்தில், சந்திரகாச்சியில் இருந்து தாம்பரம் செல்லும் வாராந்திர சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06076) வருகிற ஏப்ரல் 15, 22 மற்றும் 29 ஆகிய தேதிகளில் (புதன்கிழமைகளில்) சந்திரகாச்சியில் இருந்து இரவு 9.30 மணிக்கு புறப்பட்டு, மூன்றாம் நாள் காலை10.30 மணிக்கு தாம்பரம் வந்து சேரும்.
