Thirumavalavan About Vijay,நாம் கூட அடுத்த முதல்வர் என சொல்லவில்லை..அதன் ரியாலிட்டி நமக்கு தெரியும் : விஜய்யை விமர்சித்த திருமாவளவன் – vijay didnot know the reality of chief minister post says thirumavalavan

விசிக தலைவர் திருமாவளவன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தொடர்ந்து திமுக கூட்டணியின் வேட்பாளர்களுக்கு பரப்புரை செய்து வருகின்றார். கடைசி நேரத்தில் திருமாவளவன் தேர்தலில் போட்டியிடவில்லை என்றதும் அது மிகப்பெரிய சர்ச்சையானது. திருமாவளவனின் இந்த முடிவிற்கு திமுக தான் காரணம் என எதிர்க்கட்சியினர் கூறி வந்தனர். ஆனால் எனக்கு எந்த அழுத்தமும் யாரும் கொடுக்கவில்லை, கொடுக்கவும் முடியாது. இது என்னுடைய தனிப்பட்ட கருத்து என தெரிவித்தார் திருமாவளவன்.

அதன் பிறகு தொடர்ந்து பரப்புரையில் ஈடுபட்டு வரும் திருமாவளவன் அவ்வப்போது தவெக தலைவர் விஜய்யை விமர்சனம் செய்து பேசி வருகின்றார். பாஜக தான் விஜய்யை தனித்து போட்டியிட வைத்தது என கூறிய திருமாவளவன் இன்று மேலும் விஜய் குறித்து தன் விமர்சனங்களை முன் வைத்திருக்கின்றார்.

முதல்வர் பதவியின் ரியாலிட்டி

அதாவது, விஜய்வந்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக திரள்கின்றனர் என்பதால் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. மக்களின் கூட்டம் திரள்வதால் இதை பெரிதாக பேசி வருகின்றனர். மக்கள் கூட்டம் வருவதால் தான் ஓடியாடி உழைக்க தேவையில்லை என்ற மனநிலையில் இருக்கின்றார். மக்களுக்காக தொண்டு செய்ய தேவையில்லை என்ற எண்ணத்தில் விஜய் இருப்பதாக தெரிகின்றது. மேலும் சினிமாவில் ஆட்டம்போடுபவர்கள் முதல்வராகிவிடலாம் என்ற கனவில் இருக்கின்றனர்.

ஆனால் முதல்வர் பதவி குறித்தான ரியாலிட்டி அவர்களுக்கு தெரியவில்லை. நமக்கு முதல்வர் பதவியில் இருக்கும் ரியாலிட்டி தெரியும். நாம் கூட அடுத்த முதல்வர் என சொன்னதில்லை. அந்த ரியாலிட்டி தெரிந்ததால் ப்ராக்டிக்கலாக பேசி வருகின்றோம் என்றார் திருமாவளவன். இந்நிலையில் சமீபகாலமாக திருமாவளவன்விஜய்யையும் அவரது கட்சியான தவெகவையும் கடுமையாக விமர்சித்து பேசி வருகின்றார். திமுக கூட்டணியில் இருக்கும் பலர் விஜய்யை விமர்சித்தாலும் திருமாவளவன் சற்று கூடுதலாக சமீபகாலமாக விமர்சனம் செய்து வருவதாக தெரிகின்றது.

விஜய் ஆதரவாளர்கள் கருத்து

விஜய் குறித்தான இவரது கருத்துக்கள் தவெக ஆதரவாளர்களை வெகுவாக சீண்டியுள்ளது. எனவே விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர் திருமாவளவனை வெகுவாக விமர்சனம் செய்து வருகின்றனர். ஏன் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை ? என கூறி திருமாவளவனை விமர்சனம் செய்கின்றனர் சிலர். மேலும் சிலர் விஜய்யின் வளர்ச்சியை கண்டு பலர் பயப்படுகின்றனர். அதனால் தான் இதுபோன்ற விமர்சனங்கள் வருகின்றது என தவெக ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருப்பவர்கள் சிலர் விஜய் திமுகவின் வாக்குகளை தான் பிரிப்பார். குறிப்பாக திருமாவளவன் கட்சியின் வாக்குகளை தான் விஜய் வெகுவாக பிரிப்பார். இதனால் திமுக கூட்டணிக்கு தான் ஆபத்து என பேசி வருகின்றனர். இதுபோன்ற கருத்துக்கள் திருமாவளவனை சீண்டியிருக்குமா ? அதன் காரணமாக விஜய்யை வெகுவாக விமர்சனம் செய்து வருகிறாரா ? என்ற கேள்வியும் எழுகின்றது. மேலும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா, திமுக கொடுத்த அழுத்தத்தால் தான் திருமாவளவன் போட்டியிடவில்லை என கருத்து தெரிவித்திருக்கின்றார்.

தொடர்ந்து விமர்சிக்கும் திருமாவளவன்

எனவே இதுபோன்ற கருத்துக்களால் கூட திருமாவளவன் சற்று அதிருப்தி அடைந்து இருக்கலாம் என சொல்லப்படுகின்றது. இந்நிலையில் திருமாவளவன் ஒரு சில தினங்களுக்கு முன்பு ,திமுகவின் சிறுபான்மையினரின் வாக்குகளை பிரிக்க தான் விஜய்யை பாஜக தனித்து போட்டியிட செய்துள்ளது என கூறினார்.

இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்துவர்கள் ஆகியோரின் வாக்குகளை பிரிக்க தான் விஜய்யை பாஜக களமிறங்கியுள்ளனர் என்பது போல பேசினார் திருமாவளவன். இவரின் இந்த கருத்துக்களுக்கு விஜய்யின் ஆதரவாளர்கள் சிலர், அப்போ விஜய் திமுகவின் வாக்குகளை பிரிப்பார் என்பதை சொல்லாமல் சொல்கிறாரா திருமாவளவன் ? என கேட்டு வருகின்றனர்.

Source link