சென்னை மயிலாப்பூர் சிவசாமி சாலையில் உள்ள அந்த நிறுவனத்தில் இன்று காலை 10 மணி முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். சிஎம்டிஏ தொடர்பான அரசு ஒப்பந்தங்களை எடுக்கும் இந்த நிறுவனத்தை அமைச்சர் சேகர் பாபுவின் மகன்களான விக்னேஷ், ஜெயசிம்மன் என்பது குறிப்பிடத்தக்கது. இதே போல திருச்செந்தூர் கோவில் தக்கராக இருந்தவராக வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடந்து வருகிறது.
சென்னை கீழ்ப்பாக்கத்திலும் வருமானவரித்துறை சோதனை நடந்து வருகிறது. கீழ்ப்பாக்கம் பகுதியில் வசித்து வரும் தொழில்அதிபர் பிரேம் குமார் என்பவரது வீட்டிலும் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இவர் அரசு ஒப்பந்தங்களை எடுத்து வரும் வேலை செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அடையாறு பகுதியிலும் சோதனை நடந்து வருவதாக தெரிகிறது.
தேர்தலையொட்டி வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்படுவதாக கூறி வருமானவரித்துறை கட்டுப்பாட்டு அறைக்கு புகார்கள் வந்ததையடுத்து சென்னையில் 5 இடங்களில் சோதனை மேற்கொண்டு வருவதாக வருமானவரித்துறை தரப்பில் கூறப்படுகிறது.

