புதுடெல்லி,
ஐதராபாத் அணி, ஐபிஎல் 2026 தொடரில் மோசமான தொடக்கத்தை சந்தித்துள்ளது. இதுவரை 4 போட்டிகளில் 3 தோல்விகளை சந்தித்துள்ள ஐதராபாத் அணி, 3 முறை 200 ரன்களுக்கு மேல் எடுத்தும் வெற்றி பெறவில்லை.
இந்த நிலையில், இந்திய முன்னாள் வீரர் ஸ்ரீகாந்த், ஐதராபாத் அணியின் பந்துவீச்சை கடுமையாக விமர்சித்துள்ளார். அவர் பேசுகையில், “இந்த பந்துவீச்சுடன் ஐதராபாத் 300 ரன்கள் எடுத்தாலும் ஜெயிக்க முடியாது. 500 ரன்கள் எடுத்தால் தான் வெல்ல வாய்ப்பு இருக்கு,” என கூறினார்.
முல்லன்பூர் நடைபெற்ற போட்டியில், பஞ்சாப் அணி, ஐதராபாத்தை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. முதலில் பேட்டிங் செய்த ஐதராபாத் 219 ரன்கள் எடுத்தநிலையில், அதை பஞ்சாப் அணி 18.5 ஓவர்களில் எட்டியது. இன்று ராஜஸ்தான் அணியை ஐதராபாத் எதிர்கொள்கிறது.
