வசந்த காலத்தை முன்னிட்டு சென்னை சாலையோரங்களில் பூத்துக் குலுங்கக்கூடிய பூ மரங்களால் சென்னை அழகாக தோற்றமளிக்கிறது. கோடை வெயிலிலும் கண்ணுக்கு குளிர்ச்சியான இந்த பூ மரங்களால், பொதுமக்கள் மகிழ்ச்சி.
தமிழ்நாட்டில் கோடைகாலம் தொடங்கிவிட்டது. மாநிலத்தின் தலைநகரான சென்னை ஒரு அழகிய அவதாரத்தை எடுத்துள்ளது. மார்ச் முதல் ஏப்ரல் வரை வசந்த காலம் தொடங்கும். மார்ச் இறுதி முதல் சென்னை பூ மரங்களால் அழகாக காட்சி தருகிறது. அதிலும் குறிப்பாக பெசன்ட் நகர், மதுரவாயல், சிட்கோ தொழிற்பூங்கா, உள்ளிட்ட சாலைகளில் பூத்து குலுங்கும் டபெபுயா ரோசியா (‘வசந்த ராணி) எனும் மலர்களால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இன்ஸ்டாவாசிகள் “இது ஜப்பான் இல்ல.. நம்ம சென்னை” என ரீல்ஸ் போட்டு டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
மதுரவாயில் சாலையில் பூத்து குலுங்கும் மரங்கள்
மதுரவாயில் பைபாஸ் இரு பக்கத்திலும் பூத்துக்குலுங்கும் இந்த பிங்க் பூக்கள் வாகன ஓட்டிகள், பாதசாரிகளின் கவனத்தை ஈர்த்து வருகிறது. குறிப்பாக இன்ஸ்ட்டா வாசிகள் இந்த பிங்க் பூக்களால் ஈர்க்கப்பட்டு “சென்னை blush” செய்கிறது எனக்கூறி இணையத்தில் டிரண்ட் செய்து வருகின்றனர்.
பெசன்ட் நகர் சாலையில் போகன் வில்லாக்கள்
சென்னையின் அழகான சாலைகளில் ஒன்று பெசன்ட் நகர் ப்ளூ கிராஸ் சாலை, இந்த ‘pink blossom’ -களுக்கெல்லாம் OG என்றால் அது பெசன்ட் நகர் தான். போட்டோ ஷூட் -களுக்கென்றே வடிவமைக்கப்பட்டது போன்ற ஒரு Aesthetic சாலை. அங்கு பூத்து குலுங்கும் ‘போகன் வில்லா’ பூக்கள் இந்த சம்மரில் கண்களை கவரும் வண்ணம் பூத்து குலுங்குகின்றன.
பிங்க் சாலைகள் இன்ஸ்டாகிராமில் ட்ரெண்டிங்
வசந்த காலம் தொடங்கிவிட்டது, கோடை வெயில் எவ்வளவு கொளுத்தினாலும் சென்னை வசீகரமான தோற்றத்தை அணிந்திருக்கிறது. இன்ஸ்டா பக்கம் சென்றாலே இந்த பூ மரங்களுக்கு வித விதமான பாடல்களோடு வெளியாகும் ரீல்ஸ் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
சென்னை வசந்த காலம்
வசந்த களங்களில் பூக்கும் இந்த டபெபுயா ரோசியா கடல் மட்டத்திலிருந்து 1700 மீட்டர் வரை வறட்சியை தாங்கும். அதனால்தான் வெயில் உக்கிரமாக இருக்கும் இந்த காலத்திலும் பூத்து குலுங்குகிறது.
