​மது பிரியர்களுக்கு அதிருப்தி..! தமிழ்நாட்டில் இந்த 3 நாட்களுக்கு மதுகடை மூட திடீர் உத்தரவு -வெளியான முக்கிய அறிவிப்பு! – tamil nadu tasmac shops closed april 21 to 23election 2026

தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு 3 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழ்நாட்டில் வரும் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 23 ஆம் தேதி நடைபெற உள்ளது. மேலும் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.இதற்காக தமிழக அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. தொடர்ந்து, அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர்.குறிப்பாக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலில் உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி 3 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தமிழக சட்டமன்ற தேர்தல்

தமிழ்நாட்டில்வரும் ஏப்ரல் 23ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் தேர்தல் நடத்தை விதிகள் தற்பொழுது முழுமையாக அமலில் உள்ளது. தேர்தல் காலத்தில் அமைதியான சூழலை நிலை நிறுத்தவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன குறிப்பாக ரூபாய் 50 ஆயிரத்திற்கு மேல் பணத்தை எடுத்து செல்லும்போது உரிய ஆவணங்கள் இல்லாவிட்டால் பணம் பறிமுதல் செய்யப்படும்.

அமலில் இருக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள்

மேலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது.அதேபோல் தேர்தல் நடைபெறும் நாட்களுக்கு முன்பாக மது கடைகள் அதாவது டாஸ்மார்க் கடைகளை தற்காலிகமாக மூடுவது வழக்கம். அந்த வகையில் வாக்காளர்களை பாதிக்கக்கூடிய செயல்களை தடுக்கவும், தேர்தல் சீராக நடைபெறவும், இந்த நடவடிக்கை உதவும். அதன் அடிப்படையில், தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலை ஒட்டி எப்போது மது கடைகள் மூடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது.

டாஸ்மாக் கடைகள் மூட உத்தரவு

அந்த வகையில் ஏப்ரல் 21ஆம் தேதி காலை 10 மணி முதல் ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை தொடர்ந்து மூன்று நாட்கள் டாஸ்மார்க் கடைகள் மூட இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவை மீறி சட்டவிரோதமாக மது விற்பனை செய்பவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தீவிர கண்காணிப்பு பணியில் காவல்துறை

மேலும் இது தொடர்பாக காவல்துறையினர் மற்றும் கண்காணிப்பு குழுக்கள் தீவிரமான கண்காணிப்பு பணிகள் ஈடுபட்டு வருகின்றனர் குறிப்பாக தேர்தல் காலத்தில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கவும் பொதுமக்கள் அமைதியாக வாக்களிக்கும் சூழலை உருவாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.