இந்தசூழலில் தான் தமிழகத்திற்கு தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க முயல்வோரை ட்ரோன் கேமரா மூலம் கண்காணிக்க தேர்தல் ஆணையம் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
தேர்தல் ஆணையம் முன்னெடுத்திருக்ககூடிய நடவடிக்கைகள் என்ன?
- 2026 தமிழக சட்டமன்ற தேர்தலையோட்டி வருகின்ற 21 தேதி அன்று முதல் 23-ம் தேதி இரவு 12 மணிவரை மூன்று நாள் மதுபான கடைகள் விடுமுறை.
- தமிழக சட்டமன்ற தேர்தலில் படிவம் 12டி பயன்படுத்தி க்கால தேர்தல் பணியில் உள்ள அலுவலர்களுக்கான 1.5 லட்சம் பேர் வாக்களிக்க விண்ணப்பத்துள்ளனர்.
- 3. 40 லட்சம் தபால் ஓட்டுக்கு தகுதி உள்ளவர்கள் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
- தமிழகத்தில் ரூ.727 கோடி தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
- 85 வயது மேற்பட்டவர்கள் 1.20 லட்சம், மூத்த குடிமக்கள் மாற்றுத்திறனாளிகள் 70,000 என 1.90,000 படிவம் பெற்று தபால் ஓட்டு போட தகுதி உள்ளவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 15 ஆயரம் பேர் தமிழகம் முழுவதும் தபால் வாக்கு செலுத்தியுள்ளனர்.
தேர்தல் பாதுகாப்பு பணிகள்
தேர்தல் ஆணையம் தரப்பில், 299 துணை ராணுவ கம்பெனி பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 115 துணை ராணுவ கம்பனிகள் வந்து சேர்ந்ததாக அறிவித்த தேர்தல் ஆணையம் மீதம் உள்ள 63 கம்பெனி இன்று வருவதாக தெரிவித்துள்ளது.
திமுக கூட்டணி ஜெயித்தாலும்…திமுகக்கு ஆட்சிக்கு வராது! BJP Kalyanaraman interview
வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. வாக்காளரின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிய கைப்பேசி எண்ணில் இருந்து 1950-க்கு EPIC மற்றும் வாக்காளர் எண்ணை பதிவு செய்து குறுஞ்செய்தி அனுப்பினால் வாக்காளரின் பூத் விவரங்களை உறுதிப்படுத்திக்கொள்ளலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
20 ஆயிரம் பேரிடம் துப்பாக்கிகள்
மேலும் தமிழகம் முழுவதும் 20,757 பேரிடம் அனுமதி பெற்ற துப்பாக்கிகள் உள்ளது. இதில் 3000 -பேரை தவிர மற்ற அனைவரும் அருகில் உள்ள காவல் நிலையத்தில் தங்களின் துப்பாக்கிகளை ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. தேர்தல் சமயம் என்பதால் எந்தவித அசம்பாவிதங்களும் நடந்துவிடக்கூடாது என்பதற்காக காவல் நிலையங்களில் துப்பாக்கிகள் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை!
கடந்த சட்டமன்ற தேர்தலின்போது தமிழகத்தில் 75,032 வாக்கு சாவடிகள் இருந்த நிலையில் தற்போது 75064 வாக்குசாவடிகளாக உயர்ந்து உள்ளது.இவற்றில் பதற்றமான வாக்குச்சாவடிகளாக 5938 கண்டறியப்பட்டுள்ளது.
தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக 1.40 லட்சம் காவல் துறையினர் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் ஊர்க்காவல் படையினர் என பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தமிழகம் முழுவதும் 3.40 லட்சம் தேர்தல் பணியில் ஈடுபட உள்ளனர். தமிழக சட்டமன்ற தேர்தல் காரணமாக வருகின்ற 21,22,23 மூன்று நாட்கள் டாஸ்மாக் மதுபான கடைகள் விடுமுறை.
வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கக்கூடிய அனைத்து முயற்சிகளும் கண்காணிக்கப்பட்டு கட்டுப்படுத்த ட்ரோன் கேமரா உள்ளிட்ட பல்வேறு உத்திகளை தேர்தல் ஆணையம் ஆராய்ந்து வருவதாக தமிழக தலைமைத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
