மறைந்த ஆஷா போஸ்லே உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு

‘YOUTH’ திரைப்படத்தில் இடம் பெற்ற ‘முட்ட கலக்கி’ பாடல்  :

கென் கருணாஸ் இயக்கி நடித்த ‘YOUTH’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘முட்ட கலக்கி’ பாடல் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. பாடல் வெளியானது முதலே ரசிகர்கள் பலரும் ரீல்ஸ் செய்து இன்ஸ்டாவில் பதிவிட்டு வருகின்றனர். ஜி.வி பிரகாஷ்குமார் இசையில் உருவான இத்திரைப்படம் சுமார் 80 கோடி வரை வசூலித்ததாக கூறப்படுகிறது.

டொவினோ தாமஸ் நடித்துள்ள பள்ளிச்சட்டம்பி படம் :

டொவினோ தாமஸ் நடித்துள்ள பள்ளிச்சட்டம்பி திரைப்படத்திற்கு தணிக்கை குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது..! டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் கயாடு லோஹர் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படம் வரும் 15-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

ஏப்ரல் 14-ல் வெளியாகும் ‘கருப்பு’ படத்தின் மூன்றாம் பாடல் :

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கருப்பு திரைப்படத்தின் மூன்றாவது பாடல் வரும் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டையொட்டி வெளியாகிறது. பல முறை திரைப்படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்ட நிலையில், வரும் மே 14-ம் தேதி வெளியாவது உறுதியாகியுள்ளது. இப்படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைத்துள்ளார்.

மறைந்த ஆஷா போஸ்லே உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு :

மறைந்த பழம்பெரும் பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடலுக்கு இன்று இறுதிச்சடங்கு நடைபெறவுள்ளது. 92 வயதான அவருக்கு சனிக்கிழமை மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், ஞாயிற்றுக்கிழமை மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலுக்கு, திரைப் பிரபலங்கள் தொடங்கி அரசியல் கட்சி தலைவர்கள் வரை பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

Source link