Vijaya Prabhakaran Campaign,முதலில் ஸ்டேட்..அடுத்தது சென்டர்..அனைவரும் ஒன்றாக செயல்படுவோம்..விஜய பிரபாகரன் நம்பிக்கை – dmdk vijaya prabhakaran confident speech on his winning chances in virudhunagar constituency

விஜய பிரபாகரன் காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசினார். அந்த கூட்டத்தில் விஜய பிரபாகரன் தனது வெற்றிவாய்ப்பு குறித்தும் மக்களுக்காக தான் செய்யப்போகும் பணி குறித்தும் பேசினார் விஜய பிரபாகரன்

விருதுநகர் தொகுதியில் விஜய பிரபாகரன்

மறைந்த புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் மகனான விஜய பிரபாகரன் இம்முறை விருதுநகர் தொகுதியில் போட்டியிடுகின்றார். கேப்டனின் தேமுதிக இம்முறை திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கின்றனர். இக்கூட்டணி குறித்து பல சர்ச்சைகள் இருந்து வந்தாலும் திமுகவுடன் கூட்டணி வைத்திருப்பதால் தேமுதிக மீண்டும் பார்மிற்கு வரும் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடத்திலும் உள்ளது. திமுக கூட்டணியில் தேமுதிகவிற்கு பத்து தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த பத்து தொகுதியில் கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருத்தாசலம் தொகுதியில் போட்டியிடுகின்றார். அவருடைய மகன் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் நிற்கின்றார்.

விஜய பிரபாகரன் நம்பிக்கை

கடந்த மக்களவை தேர்தலில் விஜய பிரபாகரன் விருதுநகர் தொகுதியில் தான் போட்டியிட்டார். என்னதான் அவர் அந்த தொகுதியில் வெற்றிபெறவில்லை என்றாலும் கூட கணிசமான வாக்குகளை பெற்றார். இம்முறை திமுக கூட்டணியில் அவர் போட்டியிடுவதால் அவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகரித்து இருப்பதாகவே கணிக்கப்படுகின்றது. இதனால் நம்பிக்கையுடன் விஜய பிரபாகரன் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். தற்போது காங்கிரஸ் செயல் வீரர்கள் கூட்டத்தில் விஜய பிரபாகரன் உரையாற்றினார்.

அப்போது அவர் பேசுகையில், என்னை மற்றவராக மக்கள் பார்க்க வேண்டாம். உங்களில் ஒருவராக என்னை பாருங்கள். அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம். இந்த தொகுதியில் பல மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என விரும்புகிறேன். உங்களில் ஒருவராக என்னை பாருங்கள். கட்சி மற்றும் கூட்டணி அனைத்திற்கும் அப்பாற்பட்டு நான் உங்களில் ஒருவனாக இருக்கின்றேன். கட்சி மற்றும் கூட்டணி எல்லாம் ஒரு அடையாளம் தான். எதிர்க்கட்சிகள் எல்லாம் தேர்தலின் போது தான். தேர்தலுக்கு பிறகு அனைவருக்கும் நான் வேலை பார்க்க தயாராக இருக்கின்றேன். முதலில் ஸ்டேட் ,பிறகு சென்டர்..கண்டிப்பாக மாற்றம் வரும். அதற்காக கடுமையாக உழைத்து வருகின்றோம் என்றார் விஜய பிரபாகரன்

வெற்றிவாய்ப்பு எப்படி ?

கடந்தமுறை மக்களவை தேர்தலில் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூருடன் போட்டியிட்டு விஜய பிரபாகரன் தோல்வியை தழுவினார். ஆனால் இருவருக்கும் இடையில் குறைந்த அளவில் தான் வாக்கு வித்யாசங்கள் இருந்தது. எனவே தான் தற்போது மீண்டும் விருதுநகர் தொகுதியை விஜய பிரபாகரன் தேர்தெடுத்துள்ளார். விருதுநகர் தொகுதியில் திமுக ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர். 2016 மற்றும் 2021 ஆம் ஆண்டு திமுக தான் விருதுநகர் தொகுதியில் வெற்றிபெற்றனர். அதற்கு முன்பு 2011 ஆம் ஆண்டு தேமுதிக இங்கு போட்டியிட்டு வெற்றிபெற்றனர். இந்நிலையில் தற்போது திமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக இங்கு போட்டியிடுவதால் விஜய பிரபாகரனுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாகவே கணிக்கப்படுகின்றது.

விமர்சனங்களுக்கு பதிலடி

இந்நிலையில் தேமுதிக திமுகவுடன் கூட்டணி வைத்ததால் எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். தேமுதிகவின் வாக்கு வங்கி குறித்தெல்லாம் எடப்பாடி பழனிச்சாமி கடுமையாக பேசினார். அதோடு மட்டுமல்லாமல் தேமுதிக அங்கீகாரம் இல்லாத கட்சி எனவும் குறிப்பிட்டார் எடப்பாடி பழனிச்சாமி. மேலும் திமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்ததால் விஜயகாந்தின் ஆன்மா அவர்களை மன்னிக்காது என்றெல்லாம் பேச்சுக்கள் இருக்கின்றன. இதற்கெல்லாம் பதிலடி தரும் முனைப்பில் தேமுதிக இருக்கின்றனர். இந்த தேர்தலில் மகத்தான வெற்றிபெற்று கட்சியின் பெருமையை நிலைநாட்டும் நோக்கத்தில் தேமுதிக உழைத்து வருகின்றனர். அதோடு எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்கு எல்லாம் வெற்றியின் மூலம் பதிலடி தரும் கட்டாயத்தில் தேமுதிக இருக்கின்றனர். குறிப்பாக அங்கீகாரம் இல்லாத கட்சிக்கு பத்து தொகுதிகளை திமுக ஒதுக்கியிருக்கின்றனர் என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றனர். எனவே இதற்கெல்லாம் பதிலடி தரும் வகையில் தங்களின் வெற்றி அமைய வேண்டும் என தேமுதிக வேலை செய்து வருகின்றனர்

விஜய பிரபாகரன் பரப்புரை

காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டத்தில் விஜய பிரபாகரன் பேச்சு