தேர்தல் பிரச்சாரத்தில் விதியை மீறியதாக கூறி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மீது சீமான் போலீசார் வழக்குப் பதிவு செய்து உள்ளனர்.
நள்ளிரவு வரை நீண்ட பரப்புரை
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து சீமான் தமிழகம் முழுவதும் தீவிரப் பயணம் மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் பேரையூரில் மார்ச் 12-ம் தேதி இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் விதிமுறைப்படி, இரவு 10 மணிக்குள் பரப்புரையை முடிக்க வேண்டும். ஆனால், சீமான் அன்று இரவு 10:22 மணி வரை தொடர்ந்து பேசியதாகக் கூறப்படுகிறது.
போலீஸ் அதிரடி நடவடிக்கை
தேர்தல் விதிமுறைகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தைத் தாண்டியும் மைக் மூலம் பேசியது மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்தது போன்ற காரணங்களுக்காக, பேரையூர் காவல்துறையினர் சீமான் உள்ளிட்ட நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மைக் துண்டிப்பு விவகாரம்
ஏற்கனவே பல இடங்களில் சீமான் பேசிக் கொண்டிருக்கும் போதே, 10 மணி ஆனவுடன் காவல்துறையினர் மைக்கை துண்டிக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இது தொடர்பாகச் சீமான் பேசுகையில், “ஆளும் கட்சியினருக்கு ஒரு நீதி, எங்களுக்கு ஒரு நீதியா? ஐந்து நிமிடம் தாமதமானால் வழக்குப் போடுவது எந்த விதத்தில் நியாயம்?” எனத் தனது கண்டனத்தைப் பதிவு செய்திருந்தார்.
