100 கோடி அமெரிக்க டாலர் நிதி, அழகான மனைவி

ஹோர்முஸ் ஜலசந்தியை அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் :

பேச்சுவார்த்தை தோல்வியால் அதிருப்தி அடைந்த அமெரிக்க அதிபர் டிரம்ப், ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடப் போவதாக அறிவித்துள்ளார். ஈரானுடனான பேச்சுவார்த்தையில் அணுசக்தி விவகாரத்தில் இணக்கம் ஏற்படவில்லை என்பதால், ஹோர்முஸ் ஜலசந்திக்குள் நுழையும் அல்லது அங்கிருந்து வெளியேறும் அனைத்துக் கப்பல்களையும் அமெரிக்க கடற்படை முற்றுகையிடும் என தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவுக்கு ஈரானின் புரட்சிகர காவல்படை எச்சரிக்கை :

ஹோர்முஸ் ஜலசந்தியை முற்றுகையிடப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ள நிலையில், அபாயகரமான சுழலில் சிக்கிக் கொள்வீர்கள் என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது. தவறாக கணிக்கப்பட்ட எந்தவொரு நகர்வும், ஜலசந்தியில் உள்ள அபாயகரமான சுழலில் எதிரியை சிக்க வைக்கும் என ஈரானின் புரட்சிகர காவல்படை எச்சரிக்கை விடுத்துள்ளது.

அமெரிக்கா சர்வாதிகாரப் போக்கை கைவிட வேண்டும் :

அமெரிக்கா தனது சர்வாதிகாரப் போக்கை கைவிட்டு, ஈரான் தேசத்தின் உரிமைகளை மதித்தால், உடன்பாடு எட்டுவதற்கான வழிகள் நிச்சயமாக காணப்படும் என அந்நாட்டின் அதிபர் மசூத் பெஷெஷ்கியான் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், அமெரிக்காவுடனான பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஈரான் குழு உறுப்பினர்களையும், குறிப்பாக செய்தித் தொடர்பாளர் காலிபாஃபையும் பாராட்டுவதாக குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் – அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தை :

ஈரான், அமெரிக்கா இடையே அமைதி பேச்சுவார்த்தைக்கு தொடர்ந்து ஏற்பாடு செய்யப்படும் என பாகிஸ்தான் துணை பிரதமரும், வெளியுறவுத்துறை அமைச்சருமான இஷாக் தார் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் ஏற்பாட்டில் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடைபெற்ற அமைதி பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்த நிலையில், இவ்வாறு கூறியுள்ளார்.

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் 3,375 பேர் பலி :

அமெரிக்கா – இஸ்ரேல் கூட்டுத் தாக்குதலில் ஈரானில் இதுவரை 3 ஆயிரத்து 375 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு சட்ட மருத்துவ அமைப்பு தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களில் பள்ளி மீது நடத்திய தாக்குதலில் 165 குழந்தைகள் எனவும், 2 ஆயிரத்து 875 பேர் ஆண்கள் எனவும், 496 பேர் பெண்கள் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அடாவடி தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல் :

தெற்கு லெபனானின் நபாடியே ((Nabatieh)) பகுதியில் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து இஸ்ரேல் படைகள் மீண்டும் அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமை இதே பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட நிலையில், இஸ்ரேலின் அடாவடி தாக்குதல் தொடர்ந்து வருகிறது. விபத்தில் சிக்கியவர்கள் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

100 கோடி அமெரிக்க டாலர் நிதி, அழகான மனைவி :

100 கோடி அமெரிக்க டாலர் நிதி வழங்குவதோடு, அழகான பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என உகாண்டா ராணுவ தளபதி, துருக்கிக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.

சோமாலியாவில் பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் உகாண்டா ராணுவம் உதவியதற்காக, பாதுகாப்பு லாப பங்காகவும், தவறினால், துருக்கி விமானங்கள், தங்களது வான் எல்லையை பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் எனவும் தெரிவித்துள்ளார்.

Source link