அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு நாளை பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிப்பு

மும்பை,

நாடு முழுவதும் நாளை அம்பேத்கர் ஜெயந்தியை கொண்டாடும் நிலையில் பங்குச் சந்தைக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய பங்குச் சந்தை மற்றும் மும்பை பங்குச் சந்தை வெளியிட்ட பங்குச் சந்தை விடுமுறை நாட்காட்டியின் அடிப்படையில், அம்பேத்கர் ஜெயந்தியை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதே வேளையில், மகாராஷ்டிர தினத்திற்காக மே 1ஆம் தேதியும், பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு மே 28ஆம் தேதியும், மொஹரத்தை முன்னிட்டு ஜூன் 26ஆம் தேதியும், விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு செப்டம்பர் 14ஆம் தேதியும் பங்குச் சந்தை மூடப்பட்டிருக்கும்.

Source link