தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் காமெடி கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளவர் நடிகர் சூரி. இவர் தற்போது மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் ‘மண்டாடி’ படத்தில் நடித்துள்ளார். எல்ரட் குமாரின் ஆர்.எஸ். இன்போ நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் மகிமா நம்பியார் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் தெலுங்கு நடிகர் சுஹால், சத்யராஜ், ரவீந்திரா விஜய், அச்யுத் குமார், சாச்சனா நமிதாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மீனவர்களின் வாழ்க்கைப் பின்னணியில் இப்படம் பெரிய பொருள் செலவில் தயாராகிறது. நீண்ட நாள்களாக படப்பிடிப்பில் இருப்பதால் பேசப்படும் காட்சிகள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தமிழ்ப் புத்தாண்டு சிறப்பு போஸ்டரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இப்படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சுஹாஸ் வில்லனாக நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.இப்படம் கோடை விடுமுறையில் வெளியாக உள்ளது.
