“ஈரான் துறைமுகத்தில் பயணிக்கும் அனைத்து கப்பல்களையும் முடக்குவோம்” – டிரம்ப் பேச்சால் 8% உயர்ந்த கச்சா எண்ணெய் விலை! – trump threatens to blockade all iranian ports from monday, crude oil prices jump 8%

கடந்த பிப்ரவரி 28 -ஆம் தேதி தொடங்கிய அமெரிக்கா ஈரான் போர் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் ஈரான் உடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து இன்றைய தினம்ஹோர்முஸ் ஜலசந்தி மற்றும் ஈரானின் துறைமுகங்கள் அனைத்தயும் முற்றுகையிடப் போவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் இணையதள பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இதற்கு பதில் வினையாற்றிய ஈரான், “போரை சர்வாதிகாரப் போக்குடன் கையாளாமல் நிபந்தனைகளுக்கு ஒப்புக்கொண்டால் போரை நிறுத்துவது எளிது” என கூறியதோடு அமெரிக்கா போரை தொடர்ந்தால் நாங்களும் போரை முன்னெடுப்போம் என பேசியிருந்தது.

ஈரானிய துறைமுகங்கள் முடக்கம்

இந்த சூழலில் தான் இன்று முதல் அனைத்து ஈரானிய துறைமுகங்களும் அமெரிக்காவால் முற்றுகையிடப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கிறார்.

கடந்த வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் 21 மணி நேரம் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி ஜே.டி.வான்ஸ் மற்றும் ஈரானின் உயர் அதிகாரிகள் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த பேச்சுவார்த்தை எந்த வித தீர்வும் எட்டப்படாமல் தோல்வியில் முடிவடைந்தது.

இந்த சூழலில்தான், பேச்சு வார்த்தை தோல்வி அடைந்ததை ஒட்டி ஈரான் மீது அழுத்தம் கொடுக்கும் வகையில் ஹோர்முஸ் நீர்முனையை அமெரிக்கா முழுமையாக முற்றுகையிட போவதாக அறிவித்தது.

அனைத்து நாடுகளுக்கும் எச்சரிக்கை!

அமெரிக்காவின் மத்திய கட்டளை பிரிவு வெளியிட்ட அறிக்கையில் “ஈரானிய துறைமுகங்கள் அனைத்திலும் நுழையும் மற்றும் வெளியேறும் கப்பல்கள் முற்றுகையிடப்படும்” என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த முற்றுகை வளைகுடா நாடுகளுக்கும் பொருந்தும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அதோடு மட்டுமல்லாது ஈரானிய துறைமுகங்களுக்குள் நுழையும் அனைத்து நாடுகளின் கப்பல்களும் முடக்கப்படும் எனவும் டிரம்ப் அரசாங்கம் அறிவித்திருப்பது போர் பதற்றத்தை தீவிரப்படுத்தி இருக்கிறது.

அதே சமயத்தில் ஹோர்முஸ் நீரினை வழியாகவே ஈரானுக்கு செல்லாத கப்பல்களுக்கு எந்த பாதகத்தையும் அமெரிக்கா விளைவிக்காது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

தொடர்ந்து முரண்பட்ட தகவல்களை பேசி வரும் அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப் ஈரானுடன் போரை தொடங்கியதில் இருந்து தொடர்ந்து முன்னுக்குப் பின் முரணான தகவல்களை பேசி வருகிறார். நிச்சயமாக நேற்றைய தினம் ஹார்மோஸ் ஜலசந்திக்குள் நுழையும் அனைத்து கப்பல்களையும் முற்றுகை இடுவோம் என பேசி இருந்த அவர் இன்றைய தினம் ஈரான் துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களை மட்டும் முற்றுகை இடுவோம் என பேசியிருக்கிறார். அதோடு நேற்றைய தினம் ஈரான் கப்பல்களுக்கு மட்டுமே எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் இன்று அனைத்து நாடுகளின் கப்பல்களை முடக்குவோம் என பேசியிருக்கிறார்.

கச்சா எண்ணெய் விலை உயர்வு

இந்த சூழலில் தான் அமெரிக்கா ஈரான் துறைமுகத்தை முற்றுகையிட உள்ளதாக அறிவிப்பு வெளியினதை தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை எட்டு சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய் 104.24 டாலருக்கு விற்பனையாகிறது.

ஈரான் பதில் வினை

போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு அமெரிக்கா திறந்த மனதுடன் வரவில்லை என ஈரான் தரப்பு ஏற்கனவே விமர்சித்து இருந்தது. இந்த சூழலில் ஈரானியர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என கட்டளையிடும் இடத்தில் அமெரிக்கா இல்லை என ஈரான் அரசியல் பார்வையாளர்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

மேலும் அமெரிக்காவில் தங்களது தொழில்நுட்பத்தை கொண்டு இந்த நிலைமையை கட்டுப்படுத்த முடியும் என நினைப்பது அசட்டுத்தனமானது என விமர்சிக்கும் ஈரானியர்கள், ஹாலிவுட் யுத்திகளை கொண்டு போர்க்களத்தை வெற்றி கொள்ள முடியாது எனவும் கடுமையான விமர்சனங்களை அமெரிக்கா மீது வைத்திருக்கின்றனர்.

Source link