டி20 உலகக் கோப்பை: அமெரிக்கா அணிக்கு 189 ரன்கள் இலக்கு நிர்ணயித்த பாகிஸ்தான்

கொழும்பு,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெறும்12-வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் – அமெரிக்கா அணிகள் மோதுகின்றன .

இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. அதில் டாஸ் வென்ற அமெரிக்கா அணியின் கேப்டன் மோனங்க் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்கம் முதல் அதிரடியாக விளையாடிய பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் விக்கெட் 8 இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் பொறுப்புடன் விளையாடி ஷாகிப்சதா பர்ஹான் 73 ரன்கள் , பாபர் அசாம் 46 ரன்கள் எடுத்தனர், அமெரிக்க அணியில் ஷாட்லி வான் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். தொடர்ந்து 189 ரன்கள் இலக்குடன் அமெரிக்க அணி விளையாடுகிறது.

Source link