தமிழக இடைக்கால பட்ஜெட்: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

சென்னை,

திமுக ஆட்சியில் 5வது ஆண்டின் இறுதி பட்ஜெட்டாக வரும் 17ம் தேதி இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ள நிலையில் அதன்பிறகு பொறுப்பேற்கும் புதிய அரசு முழுமையான பட்ஜெட்டை தாக்கல் செய்யும்.

அதன்படி, 2026-27ம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டசபையில் வரும் 17ம் தேதி நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்ய உள்ளார்.

தேர்தல் நெருங்கி வரும் நிலையில் இடைக்கால பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இடைக்கால பட்ஜெட் 17ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட் தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில் தலைமை செயலாளர், நிதித்துறை செயலாளர் உள்பட பல்வேறு முக்கிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

Source link