சென்னை,
இந்தியா மற்றும் இலங்கை இணைந்து நடத்தும் 10-வது ஐ.சி.சி. ஆடவர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 20 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில், ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக அணிகள் பிரிக்கப்பட்டு லீக் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு பிரிவிலும் தலா 5 அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்த தொடரில் இன்று 3 முக்கிய லீக் போட்டிகள் நடைபெற உள்ளன. அகமதாபாத்தில் காலை 11 மணிக்கு தொடங்கும் போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இரு அணிகளும் தங்களின் பிரிவில் முன்னேற்றம் பெற இந்தப் போட்டியில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்குகின்றன.
அதேபோல், இலங்கையின் கொழும்பில் மதியம் 3 மணிக்கு தொடங்கும் மற்றொரு லீக் போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் அயர்லாந்து அணிகள் மோதுகின்றன. இதனைத் தொடர்ந்து, இரவு 7 மணிக்கு மும்பையில் நடைபெறும் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
