சென்னை,
பயிற்சியின்போது முகத்தில் ஏற்பட்ட காயத்துக்காக இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் அறுவை சிகிச்சை செய்துகொண்டுள்ளார்.
சமீபத்தில் பென் ஸ்டோக்ஸ் வலைப்பயிற்சியை ஒரு ஓரமாக நின்று வேடிக்கைப் பார்த்தபோது பந்து வந்து தாக்கி முகத்தைப் பதம்பார்த்து விட்டது. பந்து பட்டதில் கண் மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த காயத்துக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், “பார்த்தால் அப்படித் தெரியாது, ஆனால் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தது” என்று தெரிவித்திருக்கிறாார். அவர் விரைவில் பயிற்சிக்குத் திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
