டி20 உலகக் கோப்பை: புதிய சாதனை படைத்த நியூசிலாந்து ஜோடி

சென்னை,

டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் எதிராக வெற்றி பெற்றது. 2வது ஆட்டத்தில் நேற்று ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிராக 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு அமீரகத்துக்கு எதிரான ஆட்டத்தில் நியூசிலாந்து அணியின் டிம் செய்பெர்ட்-பின் ஆலென் கூட்டணி தொடக்க விக்கெட்டுக்கு ஆட்டமிழக்காமல் 175 ரன்கள் திரட்டியது. இதன் மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் தொடக்க விக்கெட்டுக்கு அதிக ரன் எடுத்த ஜோடி என்ற சாதனையை படைத்தது.

Source link