அகமதாபாத்,
டி20 உலகக்கோப்பை தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற 13வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் – தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.இதில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் எடுத்தது. டிகாக் 59 ரன்னிலும் ரிங்கல்டன் 61 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி ஒருபுறம் சீரான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தாலும் மறுபுறம்அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்து. அதிரடியாக விளையாடிய ரஹ்மானுல்லா குர்பாஸ் 42 பந்துகளில் 84 ரன்கள் அடித்து அவுட்டனார்.
ஆப்கானிஸ்தான் அணி 19.4 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளை இழந்து 187 ரன்கள் அடித்தது. இதனால் போட்டி சமனில் முடிந்தது. இதனால் சூப்பர் ஓவர் நடைபெற்றது.முதலில் விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி ஒரு ஓவரில் 17 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 18 ரன்கள் இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 17 ரன்கள் எடுத்தது. இதனால் ஆட்டம் மீண்டும் சமன் ஆனது. இதனால் ஆட்டத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனால் 2வது சூப்பர் ஓவர் கடைபிடிக்கப்பட்டது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணி 23 ரன்கள் எடுத்தது.தொடர்ந்து விளையாடிய ஆப்கானிஸ்தான் அணியில் குர்பாஸ் தொடர்ந்து 3 சிக்ஸர்கள் பறக்க விட்டும் ஆப்கானிஸ்தான் 19 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெற்றது.
